ஆன்லைன் விளையாட்டில் சேர்க்காத அக்கா., போலீஸில் புகாரளித்த 8 வயது சிறுவன்: என்ன நடந்தது தெரியுமா?

|

லூடோ கிங் எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் தன்னை அக்கா மற்றும் அவரது தோழிகள் சேர்க்காததால் அனைவர் குறித்தும் 8 வயது சிறுவன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். தங்களது பொழுதை எவ்வாறு செலவிடுவது என்று அறியாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர். ​​இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை கேமில் செலவிட்டு வருகின்றனர்.

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

அதேபோல் நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது நேரத்தை ஆன்லைனில் செலவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே, பப்ஜி, கால் ஆஃப் டூட்டி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் புதிய விளையாட்டுகளும் பிரபலமாக உள்ளன. பெரும்பாலான விளையாட்டுகள் ஒற்றை வீரர், மல்டிபிளேயர் மற்றும் ஆன்லைன் என்ற முறையிலேயே இயங்குகிறது.

Q1 2020: அதிகம் விற்பனையான மொபைல்., டாப் 6 இடத்தில் Samsung, xiaomi- உங்க போன் இதில் இருக்கா?Q1 2020: அதிகம் விற்பனையான மொபைல்., டாப் 6 இடத்தில் Samsung, xiaomi- உங்க போன் இதில் இருக்கா?

லூடோ கிங் விளையாட்டு

லூடோ கிங் விளையாட்டு

மிக வேகமாக பிரபலமான லுடோ கிங் விளையாட்டு லாக் டவுனின் போது பெரும் தேவையைக் கண்டுள்ளது. பெரியவர்களுக்கும் இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது தெரியும், மேலும் எல்லா வயதினரையும் ஈர்ப்பதில் இந்த விளையாட்டு பிரதானமாக இருந்து வருகிறது. ஒற்றை வீரர், மல்டிபிளேயர் மற்றும் ஆன்லைன் பிளேயர்களுடன் விளையாடுவதற்கான விருப்பங்கள் உள்ளன.

சிறுவன் ஒருவன் காவலர்களிடம் புகார்

சிறுவன் ஒருவன் காவலர்களிடம் புகார்

இந்த நிலையில் இந்த விளையாட்டில் தன்னை சேர்க்கவில்லை எனக் கூறி சிறுவன் ஒருவன் காவலர்களிடம் புகார் அளித்த சம்பவம் சமூகவலைதளத்தி் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் சிறுவன் உமர், 8 வயதான இவர் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே தனது குடும்பத்தாரோடு தங்கியிருந்துள்ளார்.

ஆன்லைன் லூடோ கேம்

ஆன்லைன் லூடோ கேம்

இந்த நிலையில் அவரின் அக்காவின் தோழிகள் ஆன்லைன் லூடோ கேம், திருடன் போலீஸ் உள்ளிட்ட விளையாட்டு விளையாடி உள்ளனர். இதில் தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி சிறுவன் தனது அக்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு நாங்கள் அனைவரும் பெண் இந்த கூட்டத்தில் நீ மட்டும் ஆண் என கிண்டல் சிரித்துள்ளனர்.

மன உளைச்சல் அடைந்த சிறுவன்

மன உளைச்சல் அடைந்த சிறுவன்

இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுவன் தனது தந்தையிடம் சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். அப்பா கண்டுகொள்ளாமல் போடா போய் போலீஸில் புகார் கொடு என கூறியுள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டி விசாரணைக்கு வந்ததாக கூறப்படும் போலீஸாரிடம் இந்த சிறுவன் சென்று நான் ஒரு பையன் என்பதால் என் அக்கா மற்றும் அவளின் தோழிகள் என்னை விளையாட்டில் சேர்க்கமாட்டிகிறார்கள் என புகார் அளித்துள்ளார்.

விளக்கமாக புகார் கடிதம் தயாரித்த சிறுவன்

விளக்கமாக புகார் கடிதம் தயாரித்த சிறுவன்

இரவு நேரம் ஆகிவிட்டது நாங்கள் காலை வந்து இதுகுறித்து விசாரிக்கிறோம் என கூறிவிட்டு போலீஸார் சென்றுள்ளனர். போலீஸார் காலை வருவதற்குள், இந்த சம்பவத்தை விளக்கமாக எழுதி புகார் கடிதத்தை அந்த சிறுவன் தயாரித்துள்ளார். சிறுவனின் புகார் குறித்து அறிந்துகொள்ள போலீஸார் அந்த சிறுவனின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

உமர் சகோதரி மற்றும் அவரது தோழிகளுக்கு அறிவுரை

உமர் சகோதரி மற்றும் அவரது தோழிகளுக்கு அறிவுரை

உமர் வீட்டுக்கு வந்த போலீஸார் அவரின் அக்காவை அழைத்து உமரையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரை விடுத்து சென்றுள்ளனர். இந்த செயல் கேரள மக்களிடம் மட்டுமின்றி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

source: hindustantimes.com

Best Mobiles in India

English summary
Boy complaint to police against his sister for refuse to play online ludo game

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X