Home
News

BSNL-க்கு ஒரு கும்பிடு.. மாதத்துக்கு ரூ.140 கூட இல்ல.. 11 மாதங்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 24GB டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் மாதத்துக்கு ரூ.140 கூட செலவு வைக்காமல், 11 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் இருக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 24 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), விஐ (Vi) போன்ற நிறுவனங்கள் மலிவான விலைக்கு திட்டங்களை கொடுத்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கும் விலைக்கு கிடைக்காது. ஏனென்றால், அவ்வளவு அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் இதில் கிடைக்கின்றன. இப்போது பார்க்கும் திட்டமும் அப்படித்தான் 11 மாதங்களுக்கு மலிவான விலையில் இருக்கிறது.

BSNL-க்கு ஒரு கும்பிடு.. மாதத்துக்கு ரூ.140 கூட இல்ல.. 11 மாதங்கள்!

இந்த திட்டத்தின் விலை ரூ 1499 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 336 நாட்கள் (11 மாதங்கள்) வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த ரூ 1499 விலையை 11 மாதங்களுக்கு கணக்கிட்டு பார்க்கும்போது மாதத்துக்கு வெறும் ரூ 136 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகள் மற்ற நிறுவனங்களில் கிடைக்காது.

பிஎஸ்என்எல் 11 மாத வேலிடிட்டி திட்டம் (BSNL 11 Months Validity Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். இதில் டேட்டா மட்டும் லம்ப்-சம் டேட்டாவாக கிடைக்கிறது. ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், அந்த நாட்களுக்கு 24 ஜிபி டேட்டா (24GB Data) கிடைக்கிறது.

இந்த 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு தொடர்ந்து டேட்டா சலுகை கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்களானது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) சலுகைகளாக கொடுக்கப்படுகிறது. 336 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் மட்டுமே பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். வேறு சலுகைகள் கிடைக்காது. இது மலிவான விலைக்கு கிடைப்பதால், டேட்டா சலுகை மட்டும் 24 ஜிபியாக மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்துக்கு அடுத்து மற்றொரு திட்டம் தினசரி டேட்டாவுடன் கிடைக்கிறது. ஆனால், அதில் 13 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்.

அதாவது, 395 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். அந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆகவே, அதிகப்படியான டேட்டா சலுகையை இந்த திட்டத்தில் பெறலாம். இந்த திட்டத்தின் விலை ரூ 2499ஆக இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக விலைக்கு கிடைக்கும் திட்டமாகவும் இது இருக்கிறது.

பிஎஸ்என்எல் 13 மாத வேலிடிட்டி திட்டம் (BSNL 13 Months Validity Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டத்திலும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை நாளொன்றுக்கு 2 ஜிபி என்னும் கணக்கில் கொடுக்கப்படும். இதற்கு 395 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 790 ஜிபி டேட்டா வருகிறது.

இந்த திட்டத்தின் விலையை கணக்கிட்டு பார்க்கையில், இது மிகவும் அதிகமாக டேட்டா சலுகையாகும். அதேபோல இந்த திட்டத்துக்கு 13 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், பிஎஸ்என்எஸ் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ 192 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, இந்த திட்டமும் அடிமட்ட விலைக்கு கிடைப்பதாகவே தெரிகிறது.

மற்ற சலுகைகள் எப்போதும் போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் என்று கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இப்படி மலிவான விலைக்கு பல்வேறு வருடாந்திர திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bow to BSNL Not Even Rs 140 Per Monthly Cost 11 Months Validity Unlimited Voice 24GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X