ஏர்டெல்லுக்கு கும்பிடு.. ரூ.154 மாத செலவு.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 3600 SMS-ஸ்!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் மாதத்துக்கு வெறும் ரூ.154 செலவில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், அதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்களை ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகிய சலுகைகள் மட்டுமே கொண்ட திட்டங்களை மலிவான விலைக்கு கொடுக்க தொடங்கிவிட்டன. இதில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.1849 விலை கொண்ட திட்டம் கிடைக்கிறது.

12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தின் மாத செலவை கணக்கிட்டு பார்த்தால், ரூ.154 மட்டுமே செலவாகிறது. இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவும் 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. முழு சலுகைகளையும் பார்த்தால் ஏர்டெல் கஸ்டமர்கள் கும்பிடு போடுவார்கள்.
ஏர்டெல் 12 மாத வேலிடிட்டி திட்டம் (Airtel 12 Months Validity Plan): மலிவான விலைக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஏனென்றால், இது ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாக (Yearly Plan) இருக்கிறது. இந்த 12 மாதங்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை கஸ்டர்கள் பெற்று கொள்ளலாம்.
இதில் வாய்ஸ் கால்களை அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ்களாக (Roaming Voice) செய்து கொள்ளலாம். ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம்போல நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கொடுக்கப்படாது. 12 மாதங்களுக்கும் மொத்தமாக சேர்த்து 3600ஆக கொடுக்கப்படும்.
ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு எப்போது தேவையோ, அப்போது அதிகமாகவும் அல்லது குறைவாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முக்கியமான சலுகைகள் போக கூடுதலாக மூன்று சலுகைகள் இந்த 12 மாத திட்டத்தில் கிடைக்கின்றன. முதலாவது, வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது.
அடுத்தது, ஸ்பேம் வாய்ஸ் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை அலெர்ட் செய்யும் சலுகை கொடுக்கப்படுகிறது. மூன்றாவதாக, அண்மையில் சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா (Perplexity AI) இருக்கிறது. இந்த சந்தாவும் 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி இருக்கும் வரை பயன்படுத்த முடியும்.
இந்த சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. இதில் டேட்டா சலுகை மட்டும் கிடைக்காது. இருப்பினும், இந்த விலைக்கு வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைப்பது, டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு அதிக லாபம் கொண்ட திட்டமாகவே தோன்றுகிறது. இதற்கு அடுத்து லம்ப்-சம் டேட்டாவுடன் மலிவு விலைக்கு 12 மாதங்கள் திட்டம் கிடைக்கிறது.
ஆனால், அந்த திட்டத்தின் விலை கூடுதலாக இருக்கிறது. ரூ.2,249 விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். அதாவது, 12 மாதங்களுக்கும் மொத்தமாக இந்த 30 ஜிபி டேட்டா கிடைக்கும். மற்ற சலுகைகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது. முதலாவதாக பார்த்த திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கும்.
ஆகவே, 12 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் சலுகையில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் செய்ய கிடைக்கிறது. 3600 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கொடுக்கப்படுகிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை, ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் சலுகை மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








