அடுச்சான் பாரு Boult.. 100 மணிநேர பிளேடைம்.. ENC + ANC உடன் கிரிஸ்டல் கிளியர் சவுண்ட்.. எந்த மாடல்? என்ன விலை?
போல்ட் ஆடியோ இந்திய TWS இயர்பட்ஸ் சந்தையில் புதிதாக போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) என்ற இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 100 மணிநேரம் பிளேடைம், ENC, ANC போன்ற ஆதரவை கொண்டுள்ளது. இதன் விலை என்ன?
போல்ட் (Boult) நிறுவனம் அதன் ஆடியோ போர்ட்போலியோவில் புதிய சேர்ப்பாக இந்த போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) இயர்பட்ஸ் சாதனத்தை சேர்த்துள்ளது. இது கடந்த வருடம் போல்ட் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட போல்ட் Z40 (Boult Z40) என்ற இயர்பட்ஸ் மாடலின் மேம்பட்ட மாடலாக இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra): இதுவொரு இன்-இயர் டைப் இயர்பட்ஸ் மாடலாகும். இந்த புதிய போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) சாதனம் 10mm டிரைவர் உடன் வருகிறது. இது பூம்எக்ஸ் தொழில்நுட்பத்துடன் மிரட்டலான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த புதிய ப்ளூடூத் TWS இயர்பட்ஸ் (New Bluetooth TWS Earbuds) சாதனம் குவாட் மைக் AI -ENC அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது சுற்றுப்புற இரைச்சலை கட்டுப்படுத்துகிறது. ENC என்பது என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் என்பதை குறிக்கிறது. இது 32dB வரையிலான ANC எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இரைச்சல் இல்லாத மிகவும் துல்லியமான சவுண்ட் அனுபவத்தை இந்த இயர்பட்ஸ் சாதனம் வழங்குகிறது.
100 மணி நேர பிளேடைம்: இது டச் கண்ட்ரோல் அம்சத்துடன் டூயல் டோன் வடிவமைப்பை பெற்று கண்கவர் இயர்பட்ஸ் சாதனமான வெளிவந்துள்ளது. போல்ட் நிறுவனத்தின் தகவல் படி, இந்த போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) இயர்பட்ஸ் சாதனம் 100 மணி நேர மொத்த பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) இயர்பட்ஸ் சாதனம் IPX5 ஸ்பிளாஷ் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இந்த TWS இயர்பட்ஸ் சாதனம் 45ms வரையிலான லோ-லேடன்சி கேமிங் மோட் ஆதரவையும் கொண்டுள்ளது. இதனால், கேமர்கள் லேக் இல்லாத சிறந்த கேமிங் ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க முடியும். பெர்ஸோனலைஸ் ஆடியோவை வழங்க இதில் 3EQ மோட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ப்ளூடூத் v5.3 வெர்ஷன், பிலிங்க் & பேர் தொழிநுட்பத்துடன் உடனே ஸ்மார்ட்போனுடன் இணையும் அம்சத்துடன் வருகிறது. இது SBC AAC Codec அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) இயர்பட்ஸ் சாதனம் டூயல் பேரிங் சப்போர்ட் உடன் வருகிறது. இதன் மூலம் போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) இயர்பட்ஸ் சாதனத்தை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் இணைக்கலாம்.
போல்ட் Z40 அல்ட்ரா விலை (Boult Z40 Ultra Price): இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய போல்ட் Z40 அல்ட்ரா (Boult Z40 Ultra) இயர்பட்ஸ் சாதனம் மெட்டாலிக் (Metallic), பெய்ஜ் (Beige), மற்றும் பிளாக் (Black) நிறங்களில் வெளிவருகிறது. இது இப்போது ரூ. 1,799 என்ற விலையுடன் போல்ட் ஆடியோ (Boult Audio) பக்கத்தில் வாங்க கிடைக்கிறது. மற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications