Home
News

வெறும் ரூ.1000 பட்ஜெட்.. மெட்டாலிக் டிசைன்.. டச் கன்ட்ரோல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. கேமிங் மோட்.. எந்த மாடல்?

வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் ரூ.3000 விலையில் கிடைக்கும் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், டச் கன்ட்ரோல், 60 மணி நேர பிளேபேக், ஃபாஸ்ட் சார்ஜிங், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடனும் போல்ட் ஒய்1 ப்ரோ (Boult Y1 Pro) இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

போல்ட் ஒய்1 ப்ரோ அம்சங்கள் (Boult Y1 Pro Specifications): இந்த இயர்பட்ஸ் 13மிமீ பேஸ் டிரைவர்கள் (Bass Drivers) கொண்டுள்ளது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth V5.3) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஃபாஸ்ட் பேரிங் சப்போர்ட்டுக்காக (Fast Pairing Support) பிளிங் பேர் (Blink Pair) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் ரூ.1000 விலை.. டச் கன்ட்ரோல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. கேமிங் மோட்!

அதோடு ஸ்டேபிள் கனெக்ட் (Stable Connect) மற்றும் பவர் எஃபிசியன்ட் (Power Efficient) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஏஐ இஎன்சி சிப் (AI-ENC Chip) கொண்ட குவாட் மைக் (Quad Mic) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலான அவுட்டோர் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) டெக்னாலஜியானது, கிரிஸ்டல் கிளியர் ஆடியோ (Crystal Clear Audio) மற்றும் வாய்ஸ் காலிங் அனுபவத்தை கொடுக்கும்.

இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) பயன்படுத்த முடியும். எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடெக் சப்போர்ட் வருகிறது. குறிப்பாக பேஸ் சவுண்டிங் பிரியர்களை கவரும் விதமாக பூம்எக்ஸ் (BoomX) என்னும் பிரத்யேக டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ் (Bass) மற்றும் ஸ்டீரியோ (Stereo) சவுண்டிங் அனுபவம் அடுத்த லெவலில் இருக்கும்.

இந்த இயர்பட்ஸ் டச் கன்ட்ரோல் (Touch Control) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த சப்போர்ட் மூலம் கூகுள்/சிரி அசிஸ்டன்ட் (Google/Siri Assistant), மியூசிக் நெக்ஸ்ட்/பேக் (Music Next/Back), கால் ரிசிவ் (Call Receive), வால்யூம் கன்ட்ரோல் (Volume Control), கேமிங் மோட் ஆன்/ஆப் (Gaming Mode On/Off) போன்றவற்றை கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும்.

இந்த போல்ட் இயர்பட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 120 நிமிடங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக லைட்னிங் போல்ட் டெக்னாலஜி (Lightning Boult Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவே ஃபுல் சார்ஜ் செய்து விட்டால், 60 மணி நேரத்துக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது.

இதற்காக டைப் - சி (Type - C) சார்ஜிங் போர்ட் வருகிறது. அதேபோல கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக அடாப்டிவ் காம்பேட் கேமிங் மோட் (Adaptive Combat Gaming Mode) வருகிறது. இதன் மூலம் 45ms லோவ் லேட்டன்சி ஆடியோ கிடைக்கும். டச் கன்ட்ரோல் மூலம் நான்கு முறை தொடர்ந்து டேப் செய்தால், கேமிங் மோட் ஆன் ஆகிவிடும்.

இந்த போல்ட் ஒய்1 ப்ரோ இயர்பட்ஸில் IPX5 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ப்ரூஃப் வருகிறது. இந்த இயர்பட்ஸ் மெட்டாலிக் பினிஷிங் (Metallic Finish) டிசைன் கொண்டுள்ளது. டூயல் டோன் (Dual Tone) கொண்ட ரெட் (Red), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த இயர்பட்ஸ் போல்ட் (Boult) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இவ்வளவு பக்காவான அம்சங்கள் மட்டுமல்லாமல் பிரீமியம் டிசைனிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ் மிகவும் கம்மியான பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. வெறும் ரூ.1,099க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான பிரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் நல்ல இயர்பட்ஸ் வேண்டும் என்றால், இந்த போல்ட் ஒய்1 ப்ரோ நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Boult Y1 Pro Earbuds With Touch Controls, Fast Charge Sale on Flipkart Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X