முரட்டு குவாலிட்டி.. வெறும் ரூ.1,599 பட்ஜெட்ல.. எச்டி டிஸ்பிளே.. ஜிங்க் அலாய் பிரேம்.. எந்த வாட்ச்?
பட்ஜெட் விலையில் எச்டி டிஸ்பிளே, லைட்-வெயிட் பாலிகார்பனேட் பிரேம், ப்ளூடூத் காலிங், 6 ஹெல்த் மானிட்டர்கள் போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களுடன் போல்ட் (Boult) நிறுவனத்தின் போல்ட் ஸ்டெர்லிங் (Boult Sterling) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ.
போல்ட் ஸ்டெர்லிங் அம்சங்கள் (Boult Sterling Specifications): இந்த ஸ்டெர்லிங் வாட்ச் 1.52 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இதுவொரு ஸ்போர்ட்ஸ் டிசைனில் ரவுண்ட் டயல் (Round Dial) கொண்டுள்ளது. அதோடு லைட் வெயிட் பாலிகார்பனேட் பிரேம் (Lightweight Polycorbonate Frame) கொண்டிருக்கிறது. டூயல் டோன் பிரேம் (Dual Tone Frame) கலர் வருகிறது. பிரீமியம் ஜின்க் அலாய் ரிங் (Zinc Alloy Ring) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போல்ட் வாட்ச்சில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்பில்ட் ஸ்பீக்கர் (Speaker) மற்றும் மைக் (Mic) உடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth calling) சப்போர்ட் வருகிறது. அதோடு பில்ட்-இன் டயல் கீபோர்ட் (Built-in Dial Keyboard), கால் ரிஷக்சன் மற்றும் ஆன்சர் (Call Rejection & Answer) சப்போர்ட் உள்ளது.
மேலும், சிங்க் ரீசன்ட் காண்டாக்ட்ஸ் (Sync Recent Contacts) சப்போர்ட் உள்ளது. IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) வருகிறது. இந்த போல்ட் ஸ்டெர்லிங் வாட்ச்சில் மொத்தமாக 6 ஹெல்த் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர்கள் (Heath & Activity Trackers) கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), எஸ்பிஓ2 பிளட் ஆக்ஸிஜன் மானிட்டர் (SpO2 Blood Oxygen Monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (), ஃபீமேல் சைக்கிள் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) மற்றும் ப்ரீத் டிரெய்னிங் மானிட்டர் (Breath Training Monitor) ஆகியவை வருகின்றன.
இந்த வாட்ச்சில் 150க்கும் மேற்பட்ட கிளவுட் பேஸ்ட் வாட்ச்பேஸ்கள் (Cloud Based Watchfaces) வருகிறது. அதோடு 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) கொடுக்கப்பட்டுள்ளன. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) சப்போர்ட் உள்ளது. இந்த வாட்ச்சில் மினி கேம்ஸ் (Mini Games) வருகின்றன. ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் உள்ளது.
இதன் மூலம் எஸ்எம்எஸ் (SMS), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் சோஷியல் மீடியா (Social Media) ஆப்களின் நோட்டிபிகேஷன்களை தெரிந்துகொள்ள முடியும். அதோடு ஃபைண்ட் மை போன் (Find My Phone) பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெதர் அப்டேட் (Weather Update), மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் (Music & Camera Control), ஸ்மார்ட் ரீமைண்டர் (Smart Reminder) ஆகியவை வருகின்றன.
இந்த போல்ட் ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் மரைன் (Midnight Marine), கார்பன் காப்பர் (Carbon Copper) மற்றும் ஸ்கார்லெட் எபோனி (Scarlet Ebony) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சின் விலை வெறும் ரூ.1,599 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது வெறும் அறிமுக சலுகை மட்டுமே என்பதால் விரைவில், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போல்ட் இந்தியா (Boult India) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் எச்டி டிஸ்பிளே, 6 ஹெல்த் மானிட்டர்கள், ஸ்போர்ட்ஸ் டிசைன் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டும் என்றால், இந்த போல்ட் ஸ்டெர்லிங் மாடை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








