ஆண்களுக்கான கம்பீரமான ஸ்மார்ட்வாட்ச்.. Boult Mirage வாட்ச்சின் அம்சங்கள் மற்றும் விலை.. எப்போ வாங்கலாம்?
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. புதிதாக ஆடைகள், ஷூக்கள், வீட்டிற்கு டிவி, ஸ்பீக்கர், என்று பல புதிய தயாரிப்புகளை மக்கள் வாங்கி வீட்டில் சேகரித்து வருகிறார்கள். இப்படி, இந்த தீபாவளிக்கு ஒரு அருமையான ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது.
இந்தியாவில் மக்கள் கவனத்தை ஈர்த்த மற்றும் மக்கள் நம்பிக்கையை பெட்ரா, இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனமான போல்ட் தொழில்நுட்ப பிராண்டில் இருந்து, இப்போது ஒரு புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம் அறிமுகமாகியுள்ளது. இந்த போல்ட் இந்திய ஆண்களுக்கான கம்பிரமான ஸ்மார்ட்வாட்ச் ஆகா திகழ்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் கலக்கலான அம்சத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய போல்ட் மிராஜ் (Boult Mirage) வாட்ச் 1.39' இன்ச் எச்டி டிஸ்ப்ளே (HD display), 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் (Sports mode), IP67 வாட்டர் ரெசிஸ்டன்ஸ், புளூடூத் கால்லிங் மற்றும் பல அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போல்ட் மிராஜ் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ.
போல்ட் மிராஜ் ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள் (Boult Mirage Specifications):
டிசைன் (Design):
போல்ட் மிராஜ் ஸ்மார்ட்வாட்ச் லைட் வெயிட் மெட்டல் பிரேம் உடன்0வருகிறது.
டிஸ்பிளே (Display):
இது 360×360 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட தெளிவான மற்றும் துடிப்பான காட்சிகளை வழங்கும் 1.39' இன்ச் கொண்ட HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
ஸ்போர்ட்ஸ் மோட் (Sports mode):
ரன்னிங், வால்கிங், சைக்கிலிங் போன்ற பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளை கண்காணிக்க Boult Mirage ஸ்மார்ட்வாட்ச் 120க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடை வழங்குகிறது.
ஹெல்த் மோட் (Health mode):
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச், இதய துடிப்பு மானிட்டர், இரத்த ஆக்ஸிஜன் மானிட்டர் மற்றும் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியைக் கண்காணிக்கும் ஸ்லீப் டிராக்கர் போன்ற உள்ளமைக்கப்பட்ட அம்சங்களுடன் வருகிறது.
IP ரேட்டிங் (IP Rating):
போல்ட் மிராஜ் ஒரு IP67 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. அதாவது உடற்பயிற்சிகளின் போது அல்லது மழைக்காலங்களில் இதைப் பயன்படுத்தலாம்.
புளூடூத் கால்லிங் (Bluetooth calling): போல்ட் மிராஜ் ஸ்மார்ட்வாட்ச் புளூடூத் அழைப்பை ஆதரிக்கிறது. பயனர்கள் வாட்ச் மூலம் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளவும் பெறவும் உதவுகிறது.
மியூசிக் கண்ட்ரோல் (Music control):
கூடுதலாக, Boult வழங்கும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச், பயனர்கள் இசை அல்லது பாட்காஸ்ட்களைக் கேட்க அனுமதிக்கும் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது.
பேட்டரி (Battery):
ஸ்மார்ட்வாட்ச் நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை இயங்கும்.
போல்ட் மிராஜ் (Boult Mirage) விலை:
இந்த புதிய போல்ட் மிராஜ் (Boult Mirage) இந்தியாவில் ரூ. 1,799 என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய கால் சிறப்பு சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, இந்த போல்ட் மிராஜ் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ரூ. 2,199 என்ற விலைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ள பயனர்கள் ஜின்க் அலாய் பிரேம் (Zinc Alloy Frame) மற்றும் ஐனாக்ஸ் ஸ்டீல் (Inox Steel), ஆம்பர் ப்ளூ (Amber Blue) மற்றும் கோல் பிளாக் (Coal Black) போன்ற மெட்டாலிக் ஸ்ட்ராப்கள் உட்பட போல்ட் மிராஜுக்கான பல்வேறு ஸ்ட்ராப் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய இப்போது கிடைக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட Boult Mirage ஸ்மார்ட்வாட்சை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் Flipkart மூலம் வாங்கலாம் .


Click it and Unblock the Notifications