அச்சு அசல் ஆப்பிள் வாட்ச் போல இருக்கும் Boult Crown! கம்மி விலையில் எலைட் smartwatch-ஆ இது?
வெறும் 1500 ரூபாய் விலையில், உங்களுக்கு ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் கிடைத்தால் வேண்டமென்பீர்களா? இல்லை தானே! ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போல இருக்கிறதென்றால், நம்மில் யாருமே வேண்டாம் என்று சொல்லமாட்டோம் தானே.
ஆம், என்பது தான் நம் அனைவரின் மனதிலும் தோன்றும் பதில். சரி, உங்களுக்கு ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா (Apple Watch Ultra) தோற்றத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் வேண்டுமா? அப்படியானால், நீங்கள் உடனே இந்த போல்ட் கிரௌன் ஸ்மார்ட் வாட்ச் (Boult Crown smartwatch) சாதனத்தை வாங்க வேண்டும்.

போல்ட் (Boult) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை நிறுவனம் Boult Crown smartwatch என்று அழைக்கிறது. இந்த புதிய போல்ட் கிரௌன் சாதனம் பார்ப்பதற்கு ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாயலில் அமைந்துள்ளது. இது 1.95' இன்ச் கொண்ட HD டிஸ்பிளேவுடன் வருகிறது.
இந்த போல்ட் கிரௌன் (Boult Crown) ரெக்ட்டான்குளர் மெட்டாலிக் அலாய் டயல் உடன் கிரௌன் பட்டனை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே 900 nits பீக் பிரைட்னஸ் வரை ஆதரிக்கிறது. இது ப்ளூடூத் 5.2 இணக்கத்துடன் ப்ளூடூத் வாய்ஸ் காலிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இதற்காக இதில் இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது SpO2 சென்சார், ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் பிரஷர் மானிட்டர் மற்றும் பெண் ஆரோக்கிய கண்காணிப்பு, ஆக்டிவிட்டி மானிட்டர் மற்றும் ஸ்லீப் ட்ராக்கிங் மானிட்டர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கூடுதலாக, இது கிரிக்கெட், ரன்னிங், சைக்கிலிங், பேஸ்கெட்பால், யோகா மற்றும் ஸ்விமிங் போன்று 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மோடை அணுக ஒரு பிரத்தியேக பட்டன் உள்ளது. இந்த வாட்சில் 150-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் முகங்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சிற்காக எட்டு வெவ்வேறு UI-களில் இருந்து தேர்வு செய்யும் அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சில் AI வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் பைண்ட் மை போன் (Find My Phone) போன்ற அம்சங்களும் உள்ளன.
போல்ட் ஸ்மார்ட்வாட்சில் உள்ள மற்ற அம்சங்களில் உள்ளடங்கிய அலாரம் கடிகாரம், டைமர், ஸ்டாப்வாட்ச், வெதர் ரிப்போர்ட் அப்டேட், மற்றும் இன்பில்ட் மினி கேம்ஸ் ஆகியவை இதில் அடங்கும். இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனிலிருந்து மெசேஜ், நோட்டிபிகேஷன் தகவல்களை இது வழங்குகிறது. போல்ட்டின் அறிவிப்பு படி, இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ்ற்கான IP67 சான்றை பெற்றுள்ளது.
இந்தியாவில் போல்ட் கிரௌன் (Boult Crown smartwatch) ஸ்மார்ட் வாட்ச் விலை பற்றி பார்க்கையில், இந்த சாதனம் ரூ. 1,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது தற்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Boult இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் பிளாக், ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








