இத்துனூண்டு Power bank-ல இவ்வளோ இருக்கா? ரூ.1000 மட்டுமே.. கைக்கு அடக்கமா அட்டகாசமா இருக்கு.. எந்த மாடல்?
போல்ட் (Boult) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக இரண்டு கையடக்க பவர் பேங்க் (Power bank) சாதனத்தை ஆம்ப்வால்ட் என்ற சீரிஸ் கீழ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. போல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய பவர் பேங்க் சாதனங்கள் போல்ட் ஆம்ப்வால்ட் வி10 (Boult AmpVault V10) மற்றும் போல்ட் ஆம்ப்வால்ட் வி20 (BoultAmpVault V20) என்ற பெயருடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை முறையே 10,000mAh சக்தி கொண்ட ஒரு மாடலாகவும், மற்றொன்று 20,000mAh சக்தி கொண்ட மாடலாகவும் வெளிவந்துள்ளன.
போல்ட் ஆம்ப்வால்ட் வி10 (Boult AmpVault V10) மற்றும் போல்ட் ஆம்ப்வால்ட் வி20 (BoultAmpVault V20) பவர் பேங்க் சாதனம் ஸ்லீப் டிஸைனுடன், கைக்கு அடக்கமான சாதனமாக இந்த பவர் பேங்க் சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. BoultAmpVault V20 மாடல் 20,000mAh கெப்பாசிட்டி உடன் 22.5W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனம் ஐபோன் 15 (iPhone 15) போனை 4.9 முறை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) மாடல் ஸ்மார்ட்போனை சுமார் 4.1 முறை முழுமையாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இந்த சாதனம் மைக்ரோ USB, டைப்-C மற்றும் USB பொருட்களுடன் ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கும் மல்டி சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்றவற்றை சார்ஜ் செய்யலாம்.
இந்த பவர் பேங்க் சாதனம் டீல் (Teal), ரெட் (Red), பியூர் பிளாக் (Pure Black) உடன் பிரீமியம் மெட்டாலிக் பினிஷ் (premium metallic finish) உடன் வருகிறது. இந்த பவர் பேங்க் சாதனம் LED டிஸ்பிளேவுடன் வருகிறது. இது பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதேபோல், போல்ட் ஆம்ப்வால்ட் வி10 (Boult AmpVault V10) பவர் பேங்க் சாதனமும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளது.
ஆனால், இதன் கெப்பாசிட்டி மட்டும் 10,000mAh பேட்டரி அளவில் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் சிறிய சைஸில், கைக்கு அடக்கமான ஒரு பவர் பேங்க் சாதனத்தை தேடும் நபர்களுக்கு இந்த போல்ட் ஆம்ப்வால்ட் வி10 (Boult AmpVault V10) பவர் பேங்க் சாதனம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், போல்ட் ஆம்ப்வால்ட் வி10 (Boult AmpVault V10) சாதனம் இந்திய மதிப்பின் படி ரூ. 1,099 விலையில் வருகிறது.
போல்ட் ஆம்ப்வால்ட் வி20 (BoultAmpVault V20) பவர் பேங்க் சாதனம் இந்திய மதிப்பின் படி, ரூ. 1,499 விலையில் வருகிறது. இந்த இரண்டு பவர் பேங்க் சாதனங்களும் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) தளம் மற்றும் போல்ட் (Boult) இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications