மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.! எவ்வளவு தெரியுமா?

|

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் 11 இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த விண்டோஸ் 11 வெர்ஷன் ஆனது நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 சுமார் 1.1 லட்ச ரூபாயை

இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் ஊழியர்களுக்கு சுமார் 1.1 லட்ச ரூபாயை (ஒவ்வொரு ஊழியருக்கும் 1500 அமெரிக்க டாலர்கள்) போனஸாக வழங்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஊழியர்களுக்கு

அதாவது மிகவும் சவாலான பேரிடர் காலத்தை சமாளித்தமைக்காக இந்த ஊக்கத்தொகையை ஊழியர்களுக்கு வழங்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு புதிய கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்த மாட்டோம்.! வாட்ஸ்அப் நிறுவனத்தின் நல்ல செய்தி.!இப்போதைக்கு புதிய கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்த மாட்டோம்.! வாட்ஸ்அப் நிறுவனத்தின் நல்ல செய்தி.!

 கார்பரேட் துணைத்

குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் இந்த போனஸ் தகவலை தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை வெளியிடும் தி வெர்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 1,30,000 ஊழியர்கள் இந்த ஊக்கத்தொகையைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கார்பரேட் துணைத் தலைவர் பதவிக்குக் கீழ் பணி செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..

கொடுக்க சுமார் 200

குறிப்பாக போன்ஸ் கொடுக்க சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் செலவிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் ஊக்கத்தொகை குறித்த மின்னஞ்சல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பதை அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை.

ரூ.90,000 விலை ஏசியை வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை: அமேசானின் தரமான காரியம்: கழுவி ஊற்றும் மக்கள்.! ஏன்?ரூ.90,000 விலை ஏசியை வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை: அமேசானின் தரமான காரியம்: கழுவி ஊற்றும் மக்கள்.! ஏன்?

மைக்ரோசாஃப்ட் குழுவில்

மைக்ரோசாஃப்ட் குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகியதன் காரணமாக தற்போது பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தற்போதைய பொறுப்பில் நாதெள்ளா நிறுவனத்தின் மூலோபாய வாய்ப்புகளை உயர்த்துவதற்கும், குழு மதிப்பாய்வுக்கான முக்கிய சிக்கல் மற்றும் தணிப்பு அணுகுமுறைகளை அடையாளம் கண்டு வணிகத்தை ஆழமான புரிதலோடு மேம்படுத்துவார் என
மைக்ரோசாஃப்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

PF பயனர்கள் இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.. தொடர்ந்து வைப்பு பணம் வைப்பதிலும் சிக்கல் ஏற்படும்..PF பயனர்கள் இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.. தொடர்ந்து வைப்பு பணம் வைப்பதிலும் சிக்கல் ஏற்படும்..

விண்டோஸ் 11

மேலும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 11 தளம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. பின்புஇதன் ஸ்டார்ட் மெனுவில் லைவ் டைல்ஸ் இல்லாமல் உள்ளது. அதன்பின்பு டாஸ்க் பாரில் ஐகான்களை புதிய முறையில் பொசிஷன் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுவிதமான அப்ளிகேஷன் ஸ்டோர், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சப்போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த விண்டோஸ் 11.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bonus announcement for Microsoft employees! Do you know how much: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X