Rapido பைக்-டாக்ஸி சேவைக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு! காரணம் இதுதான்.. இனி இதுவே வழி!

|

ஆட்டோ டாக்ஸி, கார் டாக்ஸி என பல பயண சேவைகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக பைக் டாக்ஸி என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இது பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும் பெரிதளவு வரவேற்பை பெற்றது. குறிப்பாக கார் ஆட்டோ போன்ற வாகனங்கள் இல்லை என்றாலும் சவாரி மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற வாய்ப்பை பலருக்கும் அளித்தது இந்த பைக் டாக்ஸி சேவை.

மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு சேவை கிடையாது

மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு சேவை கிடையாது

இந்த நிலையில் Rapido நிறுவனத்திற்கு இயக்க உரிமம் இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த சேவை இனிமேல் மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் நாடு முழுவதும் உரிமம் இல்லாமல் சேவையை நடத்தி வருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பைக் டாக்சி சேவை

பைக் டாக்சி சேவை

கடந்த மாதம், பைக் டாக்சி சேவைக்கான அனுமதி இனி கிடையாது என அந்த மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் ரேபிடோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரேபிடோ நிறுவனம் தங்களது உரிமம் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிடப்பட்டது. ஆனால் ரேபிடோ நிறுவனம் முறையான ஆவணங்களை சமர்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ரேபிடோ பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்படுவதாக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால தடை

இடைக்கால தடை

முன்னதாகவே இதுகுறித்த பல்வேறு நடைமுறைகள் நடந்திருக்கிறது. தங்களது சேவைக்கு அனுமதி வழங்கும்படி ரேபிடோ, மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சேவையின் முறையான கொள்கை வழிமுறைகளை வழங்கும்படி முறையிடப்பட்டிருக்கிறது. ஆனால் ரேபிடோ நிறுவனம் கொள்கை எதுவும் முறையாக வகுக்காத காரணத்தால் இந்த சேவையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த சேவைக்கு ரத்து விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான வழிமுறைகள் முக்கியம்

முறையான வழிமுறைகள் முக்கியம்

அதோடு மட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநில அரசு பைக் டாக்சி சேவைக்கு முறையான வழிமுறைகள் வகுத்தது என்னவென்றும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. பைக் டாக்சி சேவை தொடர்பான விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பைக் சேவைக்கு இடைக்கால தடை விதித்து ரேபிடோ நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் பைக் டாக்ஸி புக்கிங்

ஆன்லைன் பைக் டாக்ஸி புக்கிங்

முறையான வழிமுறைகள் ஆன்லைன் பைக் டாக்ஸி புக்கிங்கிற்கு மட்டும்தானா என்ற கேள்வி வரும், ஆன்லைன் பொருட்கள் ஆர்டருக்கு பல பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கிறது. இதை அறியாமல் இருப்பதே நாம் செய்யும் தவறு ஆகும்.

ஒரு பொருளை நேரில் சென்று வாங்குவதை விட ஆன்லைன் மூலம் வாங்கினால் பெரும் தள்ளுபடிகளும் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே வாடிக்கையாளர்களும் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆன்லைன் டெலிவரி

ஆன்லைன் டெலிவரி

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும்பட்சத்தில் அது டெலிவரி செய்த பிறகு அந்த பொருள் பிடிக்கவில்லை என்றாலோ வேலை செய்யவில்லை என்றாலோ ரிட்டர்ன் செய்து கொள்ளலாம்.

டெலிவரி எக்ஸ்சிக்யூட்டிவ் வீட்டுக்கே வந்து ரிட்டர்ன் பொருட்களை வாங்கிச் செல்வார்.

குறிப்பிடத்தக்க வழிமுறைகள்

குறிப்பிடத்தக்க வழிமுறைகள்

தொடர்ந்து செலுத்திய பணம் மீண்டும் வரவு வைக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்பட்சத்தில் அதை பாதுகாப்பாக கையாளுவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.

ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

ஓபன் பாக்ஸ் சிஸ்டம் என்பது டெலிவரி செய்யும் நேரத்திலேயே பொருட்கள் சரியாக உள்ளதா என்பதையும் அதன் செயல்பாடுகளையும் செக் செய்து கொள்ள வழிவகை செய்கிறது. அதன்படி பல வழிமுறைகள் இருக்கிறது. இதை அறிந்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

Best Mobiles in India

English summary
Bombay Court ordered an interim ban on the Rapido bike taxi service: Here the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X