ரூ.1,299 விலையில் இப்படி ஒரு சூப்பர் smartwatch-ஆ! சிங்கள் பிரைஸ் ஆஃப்பர்!
ஃபயர்-போல்ட் நிறுவனம் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் போல்ட் ஸ்ட்ரைக்கர் ப்ளஸ் (Bolt Striker Plus) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபயர்-போல்ட், BoAt மற்றும் Noise போன்றவற்றுடன் போட்டியிடும் நோக்கத்துடன் போல்ட் ஸ்ட்ரைக்கர் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக்கர் ப்ளஸ் 1.39' இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் IP67 சான்றளிக்கப்பட்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

போல்ட் ஸ்ட்ரைக்கர் ப்ளஸ் ஸ்மார்ட் வாட்சின் விலை பற்றி பேசுகையில், இது ரூ.1,299 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், ப்ளூ, மற்றும் வைட் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சை பிராண்டின் இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றிலிருந்து வாங்கலாம். ஸ்ட்ரைக்கர் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது இதய துடிப்பு மானிட்டர், SpO2 சென்சார், இரத்த அழுத்த மானிட்டர், மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு மற்றும் தூக்க மானிட்டர் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
இது உட்கார்ந்த நினைவூட்டல்களுடன் மூச்சுப் பயிற்சியையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது கிரிக்கெட், யோகா, ரன்னிங், சைக்கிலிங் போன்ற 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஒரு வட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வலது பக்கத்தில் ஒரு பட்டன் உடன் வருகிறது. பயனர்கள் 150-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் முகங்களை தேர்வு செய்யலாம் மற்றும் பல UI தீம்களை பயன்படுத்தலாம்.
இதில் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் கண்ட்ரோல் அசிஸ்டன்ஸ் அம்சமும் அணுக கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ரவுண்ட் டயல் உடன் 1.39' இன்ச் HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 350 nits பீக் பிரைட்னஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இது ஒரு இன்பில்ட் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கருடன் புளூடூத் காலிங் ஆதரவை செயல்படுத்துகிறது. இது ஒரு டயல் பேட், காண்டாக்ட் சிங்க், மற்றும் சமீபத்திய நோட்டிபிகேஷன் அனைத்தையும் பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் புளூடூத் 5.1 இணைப்பு அம்சத்துடன் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இது நோட்டிபிகேஷன் டிஸ்பிளே, வாய்ஸ் கண்ட்ரோல் அசிஸ்டன்ஸ், வெதர் நோட்டிபிகேஷன் மற்றும் பைண்ட் மை போன் போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் IP67 என மதிப்பிடப்பட்டுள்ளது. மலிவு விலையில் பெஸ்டான ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை வாங்க விரும்புவோர் இந்த சாதனத்தை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








