ஏலியன் இருப்பது உறுதி : 'நம்ப முடியாத' ஆதாரங்கள்..!

  |

  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை விட ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது தான் 18-ஆம் நூற்றாண்டில் இருந்து தீராமல் ஓடிக் கொண்டே போகும் மிக பெரிய விவாதமாகும்.

  புதிய சர்ச்சை : ஏலியன்கள் அனுப்பிய 'மேசேஜ்கள்'..!

  ஒருவர் ஒன்றை நம்புகிறார் என்றால் அதற்கு ஆதாரமாகவும், மூலக் காரணமாகவும் இருக்கும் ஒன்று சற்று பலமானதாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

  ஏலியன் 'இன்வேஷன்' : நாசாவின் நான்கு 'ரிஸ்க்'குகள்..!

  அப்படியாக, ஏலியன்கள் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆதாரங்களில் மிகவும் ஆணித்தனமான 5 ஆதாரங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஆதாரம் 05 :

  மைக்ரோப்ஸ் இன் மீடீயொரைட்ஸ் (Microbes in Meteorites)

  ஆய்வறிக்கை :

  நாசாவை சேர்ந்த விஞ்ஞானியான ரிச்சர்ட் ஹூவர் மார்ச் 4, 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை..!

  நீலநுண்ணுயிர் :

  அந்த ஆய்வறிக்கையில் வேற்று கிரகத்தை சார்ந்த நீலநுண்ணுயிரான (cyanobacteria), மைக்ரோப்ஸ் இன் மீடீயொரைட்ஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

  ஒற்றை செல் பாசி :

  கண்டுபிடிக்கப்பட்ட நீலநுண்ணுயிரான மைக்ரோப்ஸ் இன் மீடீயொரைட்ஸ், மிகச்சிறிய ஒற்றை செல் பாசியை ஒத்தது (tiny single-celled algae) என்பதும் குறிப்பிடத்தக்கது.

  ஆதாரம் 04 :

  வைக்கிங் லேன்டர் முடிவு (Viking Lander Results)

  ஆய்வு :

  1976-ஆம் ஆண்டு நாசாவின் இரண்டு வைக்கிங் லேன்டர்கள் செவ்வாய் கிரகத்தில் உயிரியல் சார்ந்த ஆய்வுகளை நிகழ்த்த தரை இறங்கின.

  உடல் உறுப்புகள் :

  அவைகள் சேகரித்து வந்த செவ்வாய் கிரக மண்ணில் இருந்து உடல் உறுப்புகள் சார்ந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன.

  மறுப்பு :

  பெரும்பாலான அறிவியல் சமூகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் இது ஒரு முக்கியமான உயிரின சாத்தியக் கூறு ஆகும்.

  ஆதாரம் 03 :

  செவ்வாய் புதர்கள் (Bushes on Mars)

  மரங்கள் மற்றும் புதர்கள் :

  2001-ஆம் ஆண்டு நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படங்களை நன்கு ஆராய்ந்த சர் அர்தர் சி. க்ளார்க் (Sir Arthur C. Clarke) செவ்வாயில் மரங்கள் மற்றும் புதர்கள் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டார்.

  ஏளனம் :

  அங்கு ஏதோ நகர்கிறது மற்றும் மாறிக் கொண்டே இருக்கிறது என்பது மட்டும் உறுதி என்று அவர் ஆணித் தனமாக கூறியுள்ளார். 'செவ்வாயில் மரம்' என்ற இவரின் கருத்தை அனைத்து விஞ்ஞானிகளும் ஏளனம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆசிரியர் :

  மேலும் சர் அர்தர் சி. க்ளார்க் தான் 2001 : தி ஸ்பேஸ் ஓடிஸ்ஸி என்னும் பிரபல சயின்ஸ் பிக்ஷன் நாவலின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  ஆதாரம் 02 :

  செவ்வாய் கால்வாய்கள் (Mars Canals)

  கால்வாய்கள் :

  1877-ஆம் ஆண்டு விண்வெளி வீரரான ஜியோவன்னி சியாபரெல்லி (Giovanni Schiaparelli), செவ்வாய் கிரகத்துள் மிகவும் சிக்கலான கால்வாய்கள் செல்கின்றன என்று ஆதார விளக்கம் கூறினார்.

  ஓவியங்கள் :

  பின் அதே கருத்தை மிகுந்த கண்காணிப்புக்கு பின் சிக்கலான ஓவியங்கள் மூலம் ஆதரித்தார் பிரபல விண்வெளி வீரரான பெர்சிவல் லோவெல் (Percival Lowell)

  ஹை-ரெசெல்யூஷன் படங்கள் :

  செவ்வாய் கால்வாய்களின் ஹை-ரெசெல்யூஷன் படங்கள் வெளியான பின், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தின் முன்வரை இந்த ஆதாரம் பெருமளவு நம்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  ஆதாரம் 01 :

  அல்லன் ஹில்ஸ் மீடீயொரைட் (Allan Hills Meteorite)

  படிமம் :

  1996-ஆம் ஆண்டு செவ்வாயில் கிடைத்த நுண்ணுயிர் படிமம் தான், ALH 84001 எனப்படும் அல்லன் ஹில்ஸ் மீடீயொரைட்.

  பில் கிளின்டன் :

  இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் "நாம் தனியாக இல்லை" என்று ஏலியன்களை மனதில் கொண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  விண் பாறை :

  இந்த விண் பாறையானது இன்று வரை ஆய்வில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  புகைப்படங்கள் : நாசா, ஹூவர், டாம் ரூயின், யூஜின் அன்டோனியடி, லோவெல் ஹெஸ், ராய் ஏ. கேலன்ட், எச்எஸ்டி.

  English summary
  வேற்றுகிரக வாசிகள் இருப்பது உறுதி என்பதை நிரூபிக்கும் பலமான 5 ஆதாரங்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more