பறந்து கொண்டிருக்கும் போதே மொபைல் சேவையை வழங்கும் போயிங் விமானங்கள்

Posted By: Karthikeyan
பறந்து கொண்டிருக்கும் போதே மொபைல் சேவையை வழங்கும் போயிங் விமானங்கள்

போயிங் விமானம் தனது விமானங்களில் இருக்கும் வசதிகளை மேம்படுத்தவும், அதிகமான பயணிகளைக் கவரவும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது போயிங் விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போதே அந்த விமானங்களில் செல் போனைப் பயன்படுத்தும் ஒரு புதிய வசதியை அறிவித்திருக்கிறது.

அதன் தொடக்கமாக தனது 747 மற்றும் 777 விமானங்களில் செல்போன்களுக்கான இணைப்பு வசதிகளைப் பொருத்தி இருக்கிறது. மேலும் இந்த செல்போன் சேவை வரும் 2013ல் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

அதோடு விமானம் பறந்து கொண்டிருக்கும் போது செல்போன்களில் வரும் அழைப்புகளை எடுக்கும் வசதி, அழைப்புகளை விடுக்கும் வசதி, வைபை இணைப்பு வசதி மற்றும் நேரடி டிவி நிகழ்ச்சிகள் போன்ற வசதிகளையும் வரும் காலங்களில் பயணிகள் போயிங் விமானங்களில் அனுபவிக்க முடியும்.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot