Home
News

Google Pay, PhonePe கதை முடிந்தது.. UPI-க்கு அம்பானி இறக்கிய JioPhone Prima 4G.. bob வேர்ல்டு லைட் ஆப்!

யுபிஐ பரிவர்த்தனை செய்வதற்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் கட்டாயம் தேவைப்படும். இதற்கு ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க வேண்டும். பீச்சர் போன்களிலும் யுபிஐ 123பே (UPI 123Pay) வழியாக பரிவர்த்தனைகளை செய்யலாம். இருப்பினும், ஸ்கேன் & பே, ரீசார்ஜ் செய்வது உள்ளிட்ட பேமெண்ட்களை செய்ய முடியாது. ஆனால், ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் பிரைமா 4ஜி (JioPhone Prima 4G) போன் இருந்தால் போதும் இனி அதை செய்யலாம்.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, பிஓபி (bob) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) உடன் இணைந்து பிஓபி வேர்ல்டு மொபைல் பேங்கிங் ஆப்பை (bob World Lite Mobile Banking App) களமிறக்கி இருக்கிறது. இதை பீச்சர் போன் மாடலான ஜியோபோன் பிரைமா 4ஜி போனில் பயன்படுத்த முடியும்.

Google Pay, PhonePe கதை முடிந்தது.. UPI-க்கு அம்பானி இறக்கிய ஆப்!

இந்த ஜியோபோன் பிரைமா 4ஜியில் அதிகவேக இன்டர்நெட் கிடைப்பதால், ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான வேகத்தில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் கேமராவும் இருப்பதால், ஸ்கேன் & பே பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனின் மினிவெர்ஷன் போலவே இது இருக்கும்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரியாமல், பலரும் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்வது கிடையாது. அதேபோல பீச்சர் போன்களை பயன்படுத்திவிட்டு, ஸ்மார்ட்போன்களுக்கு மாற விருப்பம் இல்லாதவர்கள், பீச்சர் போன்களைவிட ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக இருப்பதால் அதை வாங்காமல் விட்டவர்களுக்கும் இந்த ஜியோபோன் பிரைமா 4ஜி பக்காவாக இருக்கும்.

ரூ.3,000 விலைக்கும் கம்மியாக ஜியோபோன் பிரைமா 4ஜி கிடைக்கிறது. இதை வாங்கிவிட்டால் போதும், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதை போலவே யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். பேங்க் ஆஃப் பரோடாவின் மொபைல் பேங்கிங் ஆப்பாக இது இருப்பதால், அதில் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம்.

முன்னணி பேங்குகளின் அக்கவுண்ட்களையும் இதில் இணைத்து கொள்ள முடியும். இனிமேல் வாங்கப்பட இருக்கும் ஜியோபோன் பிரைமா 4ஜி பீச்சர் போனில் பிஓபி வேர்ல்டு மொபைல் பேங்கிங் ஆப் இன்-பில்ட்டாக இருக்கும். ஏற்கனவே வாங்கி கஸ்டமர்களுக்கும் டவுன்லோட் செய்ய கிடைக்கும். இப்போது, பிஓபி வேர்ல்டு மொபைல் பேங்கிங் ஆப்பில் கிடைக்கும் சேவைகளை பார்க்கலாம்.

யுபிஐ பரிவர்த்தனைகளை (UIP Transactions) இந்த பிஓபி வேர்ல்டு மொபைல் பேங்கிங் ஆப் வழியாக செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவைப்படுவதால், வழக்கம்போல ஸ்கேன் & பே (Scan & Pay), மொபைல் நம்பர் வழியாக பணம் அனுப்புவது, யுபிஐ ஐடி வழியாக பணம் அனுப்புவது உள்ளிட்ட சேவைகளை பெற்று கொள்ளலாம்.

பில் பேமெண்ட்கள், மொபைல் ரீசார்ஜ்கள் உள்ளிட்ட யூடிலிட்டி சேவைகளையும் இந்த பிஓபி வேர்ல்டு மொபைல் பேங்கிங் ஆப் கொடுத்து உள்ளது. மொபைல் பேங்கிங் ஆப்பாக இருப்பதால், அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட் சேவைகள் கிடைக்கும். பேலன்ஸ் செக் செய்வது, பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்வது உள்ளிட்ட சேவைகள் கொடுக்கப்படுகிறது.

ஜியோபோன் பிரைமா 4ஜி பீச்சர் போனை வைத்து இருக்கும் ஜியோ கஸ்டமர்கள் ஜியோஸ்டோரில் (JioStore) கிடைக்கும் பிஓபி வேர்ல்டு மொபைல் பேங்கிங் ஆப் டவுன்லோட் செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ சிம் கார்டை மட்டுமே ஜியோபோன் பிரைமாவில் பயன்படுத்த முடியும். ஆகவே, ஜியோ மொபைல் நம்பரை பேங்கில் கொடுத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
bob World Lite Mobile Banking App With UPI Transactions For JioPhone Prima 4G Feature Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X