அடிச்சு புடிச்சி வாங்கலாம்.. விலை ரூ.6,499.. சலுகை ரூ.5,000.. எச்டி டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்?
ப்ளூடூத் காலிங், எச்டி டிஸ்பிளே, இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர், 5 ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பக்காவான அம்சங்களுடன் ரூ.6,499 பட்ஜெட் கொண்டிருந்த போட் வேவ் நியோ பிளஸ் (boAt Wave Neo Plus) ஸ்மார்ட்வாட்ச் பாதிக்குப்பாதி விலையைவிட கம்மியான விலைக்கு கிடைக்கிறது.
பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு, அருமையான வாய்ப்பு வந்துள்ளது. போட் நிறுவனத்தின் போட் வேவ் நியோ பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுலையில் நம்ம முடியாத விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஆர்டர் பின்னியெடுக்கிறது. இந்த வாட்ச்சின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் பின்வருமாறு.

போட் வேவ் நியோ பிளஸ் அம்சங்கள் (boAt Wave Neo Plus Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் (240 x 282 பிக்சல்கள்) எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன.
இந்த போட் நியோ பிளஸ் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. அதோடு இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் வருகிறது. இந்த வாட்ச்சுக்கு பிரத்யேகமாக கிரெஸ்ட் பிளஸ் ஓஎஸ் (Crest Plus OS) கொடுக்கப்பட்டுள்ளது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோம் ஸ்கீரினில் குயிக் டயல் பேட் (Quick Dial Pad) அம்சம் வருகிறது. இதில் 10 காண்டாக்ஸ் வரை சேமித்துக் கொள்ள முடியும். இந்த போட் நியோ பிளஸ் வாட்ச்சில் 700+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. அதில், ரன்னிங், ஸ்விம்மிங், வாக்கிங் உள்ளிட்ட முக்கிமான பல மோட்கள் அடங்கும்.
இதற்கு IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன. அந்த வகையில், ஹார்ட் ரேட் (Heart Rate), எஸ்பிஓ2 (SpO2), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ப்ரீத் டிராக்கிங் (Breathing Exercise) உள்ளிட்ட மானிட்டர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நீண்ட நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதற்காக 260mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 7 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை ப்ளூடூத் காலிங் தொடர்ந்து பயன்படுத்தினால், 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
மேலும், கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), டைமர் (Timer), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), பைண்ட் மை போன் (Find My Phone) போன்ற முக்கியமான அம்சங்கள் இந்த வாட்ச்சில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போட் வேவ் நியோ பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் சேஜ் கிரீன் (Sage Green), மேரிகோல்டு ப்ளூ (Marigold Blue), செர்ரி பிளாசம் (Cherry Blossom) மற்றும் ஆக்டிவ் பிளாக் (Active Black) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் வெப்சைட் (boAt Website) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இந்த போட் வாட்ச்சின் விலை ரூ.6,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அறிமுக சலுகையாக பாதிக்குப்பாதி விலையைவிட கம்மியாக தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகை மூலம் வெறும் ரூ.1,599 விலையில் போட் வேவ் நியோ பிளஸ் வாட்ச்சை வாங்கிக் கொள்ள முடியும். கம்மியான பட்ஜெட்டில் ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் பேட்டரி பேக்கப் கிடைக்கூடிய வாட்ச்களில், இதுவும் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








