ஹை-ரேட் Smartwatch-லாம் வேண்டாம்! கம்மி விலையில் இப்படிவொரு boAt வாட்ச் இருக்கே! உடனே வாங்குங்க!
போட் (boAt) நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போட் வேவ் ஃபியூரி (BoAt Wave Fury) என்ற ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் இந்த சாதனம் கம்மி விலையில் அதிக அம்சங்களை கொண்டு வந்துள்ளது.
போட் நிறுவனம் இந்தியாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் உருவாக்கியுள்ளது. குறைந்த விலையில் iOS மற்றும் ஆண்ட்ராய்டு (Android) என்று இரண்டு தளங்களிலும் இயங்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமாகும் அம்சத்துடன் இதன் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் வருகிறது. அந்த வரிசையில் நிறுவனம், BoAt Wave Fury சாதனத்தை அறிமுகம் செய்கிறது.

BoAt Wave Fury ஆனது 1.83' இன்ச் HD டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 240 x 284 பிக்சல்கள் கொண்ட 550 nits இன் பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் கஸ்டமைஸ் செய்ய கூடிய வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. இது புளூடூத் வாய்ஸ் காலிங் அழைப்பு ஆதரவுடன் வருகிறது.
வாய்ஸ் காலிங் அம்சத்தை ஆதரிக்க இதில் இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கருடன் வருகிறது. இது மேலும் டிஸ்பிளேவுடன் ஒரு டயல் பேட் அம்சத்தையும் வழங்குகிறது. அதேபோல், 10 காண்டாக்ட்ஸ்கள் வரை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த புதிய BoAt Wave Fury ஸ்மார்ட்வாட்ச் ஹார்ட் ரேட் மானிட்டர், SpO2 மானிட்டர், ப்ரீத் கண்ட்ரோல், மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு மற்றும் 50+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது.
பேட்டரி அம்சம் பற்றி பேசுகையில், இந்த புதிய BoAt Wave Fury ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளதாக போட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போட் வேவ் ஃபியூரி ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தில் ப்ளூடூத் கால்லிங் அம்சத்தை பயன்படுத்தும் போது, பேட்டரி ஆயுள் 2 நாட்கள் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற வசதியான அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த BoAt Wave Fury ஸ்மார்ட் வாட்ச், பிரத்தியேகமான ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் அம்சத்தை கொண்டுள்ளது. உங்களை போனை ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்டறிய உதவும் ஃபைண்ட் மை ஃபோன் விருப்பத்தையும் இது ஆதரிக்கிறது. வெதர் ரிப்போர்ட் அப்டேட், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.
இதுதவிர, டைமர், அலாரம், ஸ்டாப்வாட்ச் போன்ற கடிகார அம்சங்களையும் இந்த BoAt Wave Fury ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஆதரிக்கிறது. இறுதியாக, இந்த ஸ்மார்ட் போனின் குவாலிட்டி பற்றி பேசுகையில், இது தரமான அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டு, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் எதிரான IP67 சான்றுடன் வருகிறது.
இதன் விலை பற்றி பேசுகையில், இந்த BoAt Wave Fury ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ரூ.1299 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart மற்றும் பிராண்டின் சொந்த இணையதளத்தில் வாங்க கிடைக்கும். இது ஆக்டிவ் பிளாக், சியான் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், செர்ரி ப்ளாசம் அல்லது டீல் கிரீன் வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








