ஆர்டர் அள்ளுது.. மெட்டாலிக் பாடி.. எச்டி டிஸ்பிளே.. 290mAh பேட்டரி.. ஆனால், பட்ஜெட் விலை.. எந்த மாடல்?
கம்மியான பட்ஜெட்டில் ஆப்பிள் வாட்ச்களுக்கு நிகரான மெட்டாலிக் டிசைன், எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் 290mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் போட் நிறுவனத்தின் போட் வேவ் எலிவேட் (boAt Wave Elevate) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வந்துள்ளது.
போட் வேவ் எலிவேட் அம்சங்கள் (boAt Wave Elevate Specifications): இந்த போட் ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் (240 x 292 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Nits Peak Brightness) வருகிறது. அதோடு கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) சப்போர்ட் வருகிறது.

இந்த போட் வாட்ச் பங்ஷனல் கிரவுன் (Functional Crown) மற்றும் சிங்கிள் பட்டன் (Single Button) கன்ட்ரோல் கொண்டுள்ளது. இதில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ஆகவே, பில்ட்-இன் மைக்ரோபோன் (Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) இடம்பெற்றுள்ளது. இது 10 மீட்டர்கள் வரை ப்ளூடூத் ரேஞ்ச் கொடுக்கும்.
மேலும், ஹோம் ஸ்கிரீனில் குயிக் டயல் பேட் (Quick Dial Pad) இடம் பெற்றுள்ளது. இதில் 20 காண்டாக்ட்களுக்கும் மேல் சேமித்து கொள்ள முடியும். ரன்னிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற 50+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) வருகின்றன. இந்த போட் வாட்ச் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் கொண்டுள்ளது.
வாய்ஸ் காலிங், அலாரம் செட் உள்ளிட்டவற்றை வாய்ஸ் கன்ட்ரோல் செய்ய முடியும். IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) வருகிறது. கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஆப்பிள் ஹெல்த் (Apple Health) சப்போர்ட் இருக்கிறது. டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker) மற்றும் செடண்டரி அலர்ட் (Sendentary Alert) வருகிறது.
இதன் மூலம் கலோரி பர்ன், வாக்கிங் டிஸ்டன்ஸ் போன்றவற்றை கவனத்திக் கொள்ள முடியும். இந்த போட் வாட்ச்சில் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் ஸ்லீபிங் மானிட்டர் (Sleeping Monitor) வருகிறது. அதோடு ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் இருக்கிறது.
இதன் மூலம் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களை தெரிந்துகொள்ள முடியும். மேலும், கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm) மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) போன்றவை வருகின்றன. அதோடு டிஎன்டி (DND), ஃபைண்ட் மை போன் (Find My Phone) போன்ற முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாட்ச் பிரீமியம் மெட்டாலிக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. 290mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரி ப்ளூடூத் காலிங் மோடில் 2 நாட்களும், ஸ்டாண்ட்பை மோடில் 5 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரம் தேவைப்படும். இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போட் வேவ் எலிவேட் வாட்ச் கிரே (Grey), பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு ஓசன் பேண்ட் ஸ்ட்ராப் (Ocean Band Strap) வருகிறது. இந்த டிசைன் ஆப்பிள் வாட்ச்களில் வருவதாகும்.
இந்த வாட்ச்சை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்த வாட்ச்சின் விலை ரூ. 2,299 ஆர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகையாகும், விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கம்மியான பட்ஜெட்டில் ஆப்பிள் வாட்ச் டிசைன், பிரீமியம் அம்சங்கள் கொண்ட வாட்ச் வேண்டுமானால், இந்த போட் வாட்ச் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications