இந்த Smartwatch போதும்.. குழந்தைகளுக்கு பாடிகாட் மாதிரி.. வீட்டில் இருந்தே கவனிக்கலாம்!
இந்தியாவில் குழந்தைகளுக்காகவே ஜிபிஎஸ், வீடியோ காலிங் உள்ளிட்ட பல அம்சங்கள் உடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட போட் வான்டிரெர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் மூலம் உங்களது குழந்தைகளை ஒரு பாடிகாட் போல ஸ்மார்ட்டாக கண்காணிக்க முடியும். ஆபத்தான நேரங்களில் முன்கூட்டியே தகவலை தெரிந்து கொள்ளவும் முடியும்.
இந்த வாட்ச்சின் மற்ற அம்சங்கள் மற்றும் விலை குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் மக்களிடையே ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அனைத்து ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்களும் நாளுக்குநாள் புதுப்புது அம்சங்களை ஸ்மார்ட்வாட்ச்களில் கொண்டுவருவதால், மக்களும் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் பல வகையில் உதவியாக இருக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கும் ஒருவர் அவரது முழு உடலையும் கண்காணித்துகொள்ள முடிகிறது. அதாவது, பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), ஆக்சிஜன் லெவல் மானிட்டர் (Oxygen Level Monitor), ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் உள்ளிட்ட பல ஹெல்த் மானிட்டர்கள் மூலம் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளலாம்.
இவை பெரும்பாலும் பெரியவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுவந்த நிலையில், போட் நிறுவனம் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக பல்வேறு அம்சங்கள் உடன் போட் வான்டிரெர் என்னும் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சை களமிறக்கியிருக்கிறது. இந்த வாட்ச் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்துக்கொள்ள முடியும்.
போட் வான்டிரெர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்: இந்த வாட்ச் ரக்கட் டிசைனின் (Rugged Design) உருவாக்கப்பட்டுள்ளது. இன்-பில்ட் ஜிபிஎஸ், (GPS) ஜியோ - பென்சிங் (Geo - Fencing) கொண்டுள்ளது. அதேபோல இன்-பில்ட் 4ஜி சிம் கனெக்டிவிட்டி (In-built 4G Sim connectivity)கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் குழந்தை எங்கே உள்ளது என்பதை நீங்கள் லைவ்வாக வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ள முடியும்.
இந்த போட் ஸ்மார்ட்வாட்ச்சில் வீடியோ கால் செய்துகொள்ள ஏதுவாக 2 எம்பி கேமரா இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டெக்ஸ்ட் (Text) மற்றும் வாய்ஸ் மெசேஜ் (Voice Message) வசதியும் உள்ளது. இவற்றை பேசிக்கொள்ள உயர்தர மைக் (Mic) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. எஸ்ஓஎஸ் அலர்ட் (SOS Alerts), அன்னோன் கால் ரெஸ்டிரிக்ஷன் (Unknown Call Restriction) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெற்றோரை தவிர வேறு யாரும் அந்த வாட்ச்சுக்கு கால் செய்ய முடியாது.
அதேபோல எஸ்ஓஎஸ் அலர்ட் மூலம் வாட்ச் சேதமடைந்தாலோ அல்லது தண்ணீரில் மூழ்கினாலோ பெற்றோருக்கு தகவல் சென்றுவிடும். அதுமட்டுமல்லாமல், வழக்கமான ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கும் பைன்ட் மை வாட்ச் (Find my watch), ஸ்டெப் டிராக்கிங் (Step-tracking) அம்சங்களும் உள்ளன. 2 நாட்கள் பேக்கப், 68hrs ஸ்டாண்ட்பை உடன் 650mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளது. கோரல் (Coral) மற்றும் அக்வா (Aqua) ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கிறது.
இந்த கிட்ஸ் வாட்ச்சின் விலையை பொறுத்த வரையில், ரூ.5,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமேசானில் ஆஃபர் விலையில் ரூ.5,000-க்கு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








