உங்க வீட்ல குழந்தைங்க இருக்காங்களா? அப்போ கண்டிப்பா இந்த ஸ்மார்ட்வாட்ச் அவங்க கைல இருக்கனும்.. சூப்பர் சேஃப்டி
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்; மற்றும் மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏன் ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக வாங்க வேண்டுமென்று. இனி வரும் காலத்தில், மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக இந்த குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மாறப்போகிறது. காரணம், இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால், உங்கள் குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறதென்பதனால், இதன் விற்பனை தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதை உணர்ந்த போட் (boAt) நிறுவனம் தற்போது போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் என்ற சாதனத்தை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
என்னது குழந்தைகளுக்கு எல்லாம் தனியாக ஸ்மார்ட்வாட்ச் சாதனமா? என்று சிலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பலாம். ஆம் மக்களே, இந்த ஸ்மார்ட்வாட்ச் பிரத்தியேகமாக குழந்தைகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய பேபி ஸ்மார்ட்வாட்ச் (Baby Smartwatch) சாதனத்தை போட் நிறுவனம் போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இது பற்றிய முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.

போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch):
இந்த புதிய போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch) சாதனம் 4ஜி மற்றும் வைஃபை ஆதரவை கொண்டுள்ளது. இதில் குழந்தைகளின் சரியான இடத்தை பெற்றோருக்கு எப்போதும் லைவாக காண்பிக்கும் பாதுகாப்பான ஜிபிஎஸ் அம்சமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள், பத்திரமாக தான் இருக்கிறார்களா? என்ற கவலையே இல்லாமல் பெற்றோருக்கு நிம்மதியாக இருக்க இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரிதும் பயன்படுகிறது.
இந்த புதிய போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.4" இன்ச் அளவு கொண்ட எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மிகவும் உறுதியான வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பும் கூட வழங்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல, இதில் 4ஜி சிம் கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது. அதேநேரத்தில், இதில் வைஃபை எனப்பில்டு அம்சமும் இருக்கிறது.
இதில் 2MP கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் நேரடியாக வீடியோ அழைப்புகளை நீங்கள் பேசிக்கொள்ள முடியும். இது தவிர இந்த போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch) சாதனத்தில் ரியல் டைம் லொகேஷன் ட்ராக்கிங் அம்சம், ஜியோ பென்சிங் அம்சம், பேரண்ட கண்ட்ரோல், ஸ்டெப் ட்ராக்கிங் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் விலை என்ன? (boAt Wanderer Kids Smartwatch Price):
இந்த போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch) சாதனத்தின் பேட்டரி 2 நாட்கள் மட்டுமே நீடிக்கும். காரணம், இதில் முழு நேரம் 4ஜி மற்றும் ஜிபிஎஸ் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சிற்கு யார் வேண்டுமானலும் கால் செய்து உங்கள் குழந்தைகளுடன் பேச முடியுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். அதை பற்றிய கவலையே வேண்டாம்.
நீங்கள் அனுமதிக்கும் மொபைல் எண்களில் இருந்து மட்டுமே உங்கள் குழந்தைகளை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்பது கூடுதல் பாதுகாப்பு. இது தவிர இதில் SOS எமெர்ஜென்சி அலெர்ட், கேமரா ரிமோட், போன்ற பல அம்சங்களை போட் நிறுவனம் இந்த குழந்தைகள் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் வழங்கியுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது ரூ. 4999 என்ற சிறப்பு அறிமுக விலையுடன் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.
இதில் கேண்டி பிங்க் (Candy Pink), சான்ஸைன் எல்லோவ் (Sunshine Yellow), மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) போன்ற 3 நிறங்களில் போட் வான்டரர் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wanderer Kids Smartwatch)சாதனம் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








