Home
News

ஆர்டர் அரளுது.. ரூ.2,999 பட்ஜெட்ல கர்வ்ட் AMOLED டிஸ்பிளே.. ஹெல்த் சூட்.. 240mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட் வியக்கும் விதமாக பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக்கில், அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், மெட்டாலிக் ஸ்ட்ராப், ஹெல்த் சூட் மானிட்டர்கள், 240mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் போட் அல்டிமா வோக் (boAt Ultima Vogue) ஸ்மார்ச்வாட்ச் அறிமும் செய்யப்பட்டுள்ளது.

போட் அல்டிமா வோக் அம்சங்கள் (boAt Ultima Vogue Specifications): இந்த போட் வாட்ச் 1.96 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் அமோலெட் (Always-on AMOLED) டிஸ்பிளேவாகும். இதில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.2,999க்கு கர்வ்ட் AMOLED டிஸ்பிளே.. 240mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த வாட்ச்சில் 100+ கிளவுட் பேஸ்ட் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Customizable Watch Faces) வருகின்றன. இதன் கன்ட்ரோலுக்காக பங்ஷனல் கிரவுன் (Functional Crown) மற்றும் பட்டன் (Button)கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது. ஆகவே, இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.

அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad), 20 காண்டாக்ட்ஸ் சேவ் (Contacts Save) சப்போர்ட் வருகிறது. 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கொண்டுள்ளது. அதில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் உள்ளிட்ட முக்கியமான மோட்களும் உள்ளன. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போட் ஸ்மார்ட்வாட்ச்சில் கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஆப்பிள் ஹெல்த் (Apple Health) சப்போர்ட் வருகிறது. IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and Dust Resistance) கொடுக்கப்பட்டுள்ளது. போட் ஹெல்த் சூட் (boAt Health Suite) சப்போர்ட் உள்ளது.

ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் ( Heart Rate Monitor), மென்சுரல் சைக்கிள் மானிட்டர் (Menstrual Cycle Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் (Stress Level Monitor) மற்றும் டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily activity tracking) ஆகியவை வருகின்றன.

இந்த போட் வாட்ச்சில் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களை காண ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்ஸ் (Smart Notification) அம்சம் வருகிறது. அதோடு செடண்டரி அலர்ட் (Sedentary Alert), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட் (Weather Update) அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அலாரம் (Alarm), கவுண்டவுன் (Countdown), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டிஎன்டி (DND) மற்றும் ஃபைண்ட் மை போன் (Find My Phone) ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. இந்த வாட்ச்சில் 240mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது.

இந்த போட் அல்டிமா வோக் ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் பிளாக் (Metal Black), பிரவுன் லெதர் (Brown Leather), ஜெட் பிளாக் (Jet Black), பீஜ் (Beige) மற்றும் டீப் ப்ளூ (Deep Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் லெதர் (Leather), சிலிகான் (Silicone) மற்றும் மெட்டாலிக் (Metallic) ஆகிய வேரியண்ட்களில் ஸ்ட்ராப்கள் உள்ளன.

ஆகவே, இதன் லெதர் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.2,999ஆகவும், மெட்டாலிக் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.3299ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அமேசான் (Amazon) மற்றும் போட் வெப்சைட் (boAt Website) ஆகிய தளங்களில் விற்பனைக்கு வாங்கிக்கொள்ளலாம். இது அறிமுக சலுகையில் கிடைக்கக்கூடிய விலையாகும். இந்த விலை விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Ultima Vogue Smartwatch AMOLED Display, Bluetooth Calling Sale on Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X