காஸ்ட்லீ ஸ்மார்ட்வாட்ச்லாம் வாங்காதீங்க! boAt Ultima Call வாட்ச்லயே எல்லாம் இருக்கு! உடனே வாங்குங்க!
ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) என்று சொன்ன உடனேயே, பெரும்பலானோருக்கு நினைவில் வரும் பெயர் போட் (BoAt) என்ற பிராண்ட் தான். இத்தகைய நம்பகமான பிராண்டில் இருந்து வெளிவந்துள்ள புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விபரங்களை தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
இந்திய தொழில்நுட்ப பிராண்டான boAt நிறுவனம், புதிதாக boAt Ultima Call எனப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய போட் அல்டிமா கால் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் நியாயமான விலையில், ப்ளூடூத் கால்லிங் அம்சம் மற்றும் பல சிறப்பான அம்சங்களை பேக் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.83' இன்ச் HD 2.5D கர்வுட் வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த boAt Ultima Call ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்கள் பேக் செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற விபரங்களை பார்க்கவிருக்கிறோம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் சாதனமானது ரூ.2,000 விலையிக்கு கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கிடைக்கும் தன்மை மற்றும் பிற விவரங்களைப் பற்றி பார்ப்போம் வாங்க.
இந்தியாவில் போட் அல்டிமா கால் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் புதிதாக பட்ஜெட் செக்மென்ட் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த boAt Ultima Call ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் ரூ. 1,699 விலையில் வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 19 ஆம் தேதி நண்பகல் முதல் ப்ளூ, பிளாக், சில்வர் மாற்று பிங்க் என்ற நான்கு வண்ண விருப்பங்களில் இது வாங்க கிடைக்கும்.
BoAt Ultima Call ஸ்மார்ட் வாட்சின் அம்சங்களை பற்றி பேசுகையில், இது 1.83' இன்ச் கொண்ட HD 2.5D வளைந்த டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது 700 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. போட் அல்டிமா கால் ஸ்மார்ட்வாட்ச் 100க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கக்கூடிய வாட்ச் பேஸ் முகங்களை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச், உயர்தர உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன், டயல் பேட் உடன் புளூடூத் அழைப்பு ஆதரவை வழங்குகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட boAt Ultima Call ஆனது ஸ்மார்ட்வாட்ச்சில் 10 தொடர்புகள் வரை சேமிக்க பயனர்களை அனுமதிக்கிறது. BoAt Ultima Call சாதனம் ஒரு வாரம் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. புளூடூத் அழைப்பு அம்சத்தைப் பயன்படுத்தும் போது, ஸ்மார்ட்வாட்ச்சின் பேட்டரி பேக்கப் இரண்டு நாட்களாகக் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. BoAt Ultima Call ஸ்மார்ட்வாட்ச் க்ரெஸ்ட் பிளஸ் இயங்குதளத்துடன் (OS) வருகிறது.
இது பல ஸ்போர்ட்ஸ் மோட் முறைகளை ஆதரிக்கிறது. பிளட் ஆக்ஸிஜன் (SPo2), இதய துடிப்பு, தினசரி செயல்பாட்டு கண்காணிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்கள் இதில் உள்ளது. இது IP68 மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 30 நிமிடங்கள் வரை 1.5 மீட்டர் ஆழத்தில் நீரில் சேதத்தை எதிர்க்கும் திறன் கொண்டது. லைவ் கிரிக்கெட் ஸ்கோர்ஸ், கேமரா கட்டுப்பாடு, மியூசிக் கட்டுப்பாடு, அலாரம், வானிலை, கவுண்டவுன் டைமர், ஸ்டாப்வாட்ச் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








