Home
News

நீ எங்கயா இங்க.. இந்தி மொழியில் களமிறங்கும் boAt ஸ்மார்ட்வாட்ச்.. பட்ஜெட் விலையில் Curved டிசைன்!

பட்ஜெட் விலையில் கர்வ்ட் டிசைன், ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டர், கேமரா கன்ட்ரோல்ஸ், வெதர் அப்டேட் உள்ளிட்ட அனைத்தையும் பேக் செய்யும் விதமாக போட் (boAt) நிறுவனத்தின் போட் ஸ்டோர்ம் கனெக்ட் பிளஸ் (Storm Connect Plus) ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) அறிமுகமாகி உள்ளது.

இப்போது ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டிருப்பதால், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. ஒருவரிடம் ஸ்மார்ட்வாட்ச் இருப்பதும், ஒரு மினி டாக்டர் இருப்பதும் ஒன்றுதான், ஏனென்றால் ஸ்மார்ட்வாட்ச்களில் அவ்வளவு ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor) உள்ளன.

நீ எங்கயா இங்க.. இந்தி மொழியில் களமிறங்கும் boAt ஸ்மார்ட்வாட்ச்

பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), ஆக்சிஜன் லெவல் மானிட்டர் (Oxygen Level Monitor), ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் (Sleeping Time Tracking), பெண்களுக்கு என மென்ஸ்சுரல் டிராக்கர் (Menstrual Tracker), ஸ்டெப்ஸ் & காலோரிஸ் டிராக்கிங் (Step and Calorie Tracking) உள்ளிட்டவை ஸ்மார்ட்வாட்ச்களில் கொடுக்கப்படுகின்றன.

இதன் மூலம் ஒருவர் முழு உடல் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து கண்காணித்துக்கொள்ள முடியும். இவ்வளவு அம்சங்கள் இருந்தும், ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்கள் மேலும் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், கர்வ்ட் டிசைன் (Curved Design), ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling), கேமரா கன்ட்ரோல்ஸ் (Camera Controls), வெதர் அப்டேட் (Weather Update) அம்சங்களுடன் போட் நிறுவனத்தின் ஸ்டோர்ம் கனெக்ட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வந்துள்ளது.

போட் ஸ்டோர்ம் கனெக்ட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் மற்றும் விலை: இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.91 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கர்வ்ட் டிசைனில் கொண்டுள்ளது. அதில் 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு நிகராக பிரீமியம் மெட்டாலிக் டிசைனின் கவர்கிறது.

சிங்கில் சிப் ப்ளூடூத் காலிங் (Bluetooth calling) மற்றும் ஏஐ நாய்ஸ் கேன்சலேசன் (AI noise cancellation) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரிஸ்டல் கிளியர் காலிங் அனுபவம் கிடைக்கும். IP68 தரத்தில் டஸ்ட் (Dust), ஸ்வெட் (Sweat) மற்றும் ஸ்ப்லாஷ் (Splash) ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கப் 10 நாட்களுக்கு நீடிக்கும். 300 எம்ஏஹெச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரையில், ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் ஆக்சிஜன் லெவல் மானிட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) உள்ளன. அதேபோல 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) உள்ளன. குறிப்பாக மல்டி லாங்குவேஜ் அம்சம் உள்ளது. இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வாட்ச்சை பயன்படுத்தலாம்.

அதேபோல அலாரம் (Alarm), கேமரா கன்ட்ரோல்ஸ், மியூசிர் கன்ட்ரோல்ஸ் (Music Controls), வெதர் அப்டேட் நோட்டிபிக்கேஷன்ஸ் (Weather Update Notification) உள்ளிட்ட வசதிகள் உள்ளன. விலையை பொறுத்தவரையில் ரூ.1999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் பிளாக் (Active Black), டீப் ப்ளூ (Deep Blue), மெரூன் (Maroon) ஆகிய மூன்று கலர்களின் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Storm Connect Plus smartwatch launched with curved design and bluetooth calling here is full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X