Home
News

தாறுமாறு மோதிரம்.. டச் கன்ட்ரோல்.. பாடி டிராக்கிங்.. நேவிகேட் அப்ளிகேஷன்.. வயர்லெஸ் சார்ஜிங்.. என்ன விலை?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மோதிரத்தில் 5 ஹெல்த் மானிட்டர்கள், மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல், ரன்னிங், வாக்கிங் டிராக்கர், ஸ்மார்ட் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வியக்க வைக்கும்படியான அம்சங்கள் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதுகுறித்தே இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.

போட் நிறுவனத்தின் போட் ஸ்மார்ட் ரிங் (boAt Smart Ring) அமேசானில் விற்பனைக்கு வரவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெறும் 17.40 மிமீ அளவு கொண்ட இந்த ஸ்மார்ட் ரிங் மூலம் உங்களது பிளட் ஆக்ஸிஜன் லெவல், பாடி டெம்பரேச்சர் போன்றவற்றை மட்டுமல்லாமல், டச் கன்ட்ரோல் மூலம் மொபைலை கன்ட்ரோல் செய்ய முடியும். இதன் முழு அம்சங்கள், விலை உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

டச் கன்ட்ரோல்.. பாடி டிராக்கிங்.. நேவிகேட் அப்ளிகேஷன்.. என்ன விலை?

போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள் (boAt Smart Ring Specification): இந்த போட் ரிங் பிரீமியம் செராமிக் (Ceramic) மற்றும் மெட்டல் (Metal) பாடி கொண்டுள்ளது. சிங்கிள் ஹேண்ட் மூவ்மெண்ட்ஸ் (Single Hand Movements) மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். ஸ்மார்ட் ஆக்டிவிட்டி டிராக்கிங் (Smart Activity Tracking) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்கிங், ரன்னிங், ரைடிங் போன்ற ஆக்டிவிட்டிகளை டிராக்கிங் செய்து கொள்ள முடியும்.

இந்த ரிங்கில் 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Levels Monitor) மற்றும் மென்சுரல் டிராக்கிங் மானிட்டர் (Menstrual Tracking Monitor) வருகின்றன.

அதோடு பாடி ரிக்கவரி டிராக்கிங் (Body Recovery Tracking) வருகிறது. 5 ஏஎம்டி (AMT) வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரிங்கில் ஸ்மார்ட் வயர்லெஸ் சார்ஜிங் (Smart Wireless Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரிங்கை ஒரு முறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் (Smart Toch Control) மூலம் மியூசிக் கன்ட்ரோல் மற்றும் கேமரா கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். ஆகவே, இந்த ரிங்குடன் கனெக்ட் செய்ப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனில் பிளே/பாஸ் மியூசிக் (Play/Pause Music), சேஞ்ஜிங் டிராக்ஸ் (Change Tracks), கிளிக் பிக்சர்ஸ் (Click Pictures), நேவிகேட் அப்ளிகேஷன் (Navigate Applications) உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட் ரிங் மூலம் சேமிக்கப்படும் டேட்டாக்களை போட் ரிங் ஆப் (boAt Ring App) மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில், டிடெயில் இன்சைட்ஸ் (Detailed Insight), இன்டர்ஆக்டிவ் டேட்டா விசுவலைசேஷன் (Interactive Data Visualization), டிரெண்ட் மேப்பிங் (Trend Mapping), பிராகரஸ் டிராக்கிங் (Progress Tracking) உள்ளிட்டவை அடங்கும்.

இதில் எஸ்ஓஎஸ் (SOS) மோஷன் சென்சிங் சப்போர்ட் உள்ளது. இந்த எஸ்ஓஎஸ், உங்களது பாடி மூவ்மெண்ட், ஹார்ட் ரேட் உள்ளிட்டவை ஆபத்தான நிலையை எட்டும் போது, ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கையை தெரியப்படுத்தும். அதோடு ஆக்ஸிஸ் மோஷன் சென்சார்கள் (Axis Motion Sensors) கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட் ரிங் 7, 9 மற்றும் 11 ஆகிய விரல் அளவுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போட் ஸ்மார்ட் ரிங் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இப்போது, அமேசானில் (Amazon) விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரிங்கின் அம்சங்கள் அமேசானில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 8,000 அல்லது ரூ.10000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒரு பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும், பெரும்பாலான அம்சங்கள், இந்த போட் ஸ்மார்ட் ரிங்கில் கொடுக்கப்பட்டு உள்ளதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Smart Ring With Smart Charging Listed on Amazon India Expected Launch Date, Specification, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X