மிரண்டு போவீங்க.. விரலில் ஹெல்த் மானிட்டர்.. சொடக்கில் டச் கன்ட்ரோல்.. 7 நாள் பேட்டரி.. என்ன விலை?
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விரல் நுனிக்கு வந்துவிட்டது என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். அதை கண் முன்னோ கொண்டுவந்து நிறுத்தும்படி, போட் ஸ்மார்ட் ரிங்கில் (boAt Smart Ring) 5 ஹெல்த் மானிட்டர்கள், வயர்லெஸ் சார்ஜிங், டச் கன்ட்ரோல் போன்ற வியக்க வைக்கும் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள் (boAt Smart Ring Specification): இந்த போட் ரிங்கில் 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப்பிங் மானிட்டர் (Sleeping Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Levels Monitor) மற்றும் மென்சுரல் டிராக்கிங் மானிட்டர் (Menstrual Tracking Monitor) வருகின்றன.

இவற்றில், ஹார்ட் ரேட் மானிட்டரானது, 24 மணி நேரமும் ஹார்ட் ரேட் அனாலிசிஸ் (Heart Rate Analysis) செய்ய உதவுகிறது. அதேபோல பாடி டெம்பரேச்சர் மானிட்டரானது, பீவர் டெம்பரேச்சர் அலர்ட் (Fever Temperature Alert) கொடுக்க உதவியாக இருக்கிறது. எஸ்பிஓ2 மானிட்டர் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கீடு செய்து, அதை பிளட் ஆக்ஸிஜன் லெவல் இன்சைட்ஸ் (Blood Oxygen Level Insights) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
ஸ்லீப்பிங் மானிட்டர் மூலம் டீப் ஸ்லீப் (Deep Sleep) மற்றும் லைட் ஸ்லீப் (Light Sleep) ஆகியவற்றின் வேரியேஷனை தெரிந்து கொள்ள முடியும். மென்சுரல் டிராக்கிங் மானிட்டர் மூலம் மென்சுரல் டேட் நோட்டிபிகேஷன் (Menstrual Date Notifications) பெற்றுக் கொள்ள முடியும்.
அதோடு, பாடி ரிக்கவரி டிராக்கிங் (Body Recovery Tracking) சப்போர்ட் வருகிறது. இந்த போட் ரிங்கில் ஆக்டிவிட்டி டிராக்கிங் (Smart Activity Tracking) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்கிங் மூலம், உங்களது பிசிகல் ஆக்டிவிட்டி தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதில் வாக்கிங் (Walking), ரன்னிங் (Running), ரைடிங் (Riding), டான்ஸ் (Dance) போன்றவை அடங்கும்.
இதன்மூலம் கலோரிகள் பர்னிங்கை (Calories Burning) எளிதாக கணக்கீடு செய்து தெரிந்துகொள்ள முடியும். இந்த போட் ரிங்கில் ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் (Smart Toch Control) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச்களை போலவே, கேமரா கன்ட்ரோல் (Camera Control) மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Music Control) செய்து கொள்ளலாம்.
அந்த வகையில், ஸ்மார்ட்போனில் சாங்ஸ் கேட்கும்போது பிளே/பாஸ் (Play/Pause) மற்றும் சேஞ்ஜிங் டிராக்ஸ் (Change Tracks) செய்துகொள்ளலாம். போனின் கேமராவில் போட்டோ கிளிக் செய்ய இந்த ரிங்கை பயன்படுத்தலாம். கட்டை விரலை பயன்படுத்தி சிங்கிள் ஹேண்ட் மூவ்மெண்ட்ஸ் (Single Hand Movements) மூலம் இந்த கன்ட்ரோல்களை செய்ய முடியும்.
இந்த ரிங்குக்கு 5 ஏஎம்டி (AMT) வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. எஸ்ஓஎஸ் (SOS) மோஷன் சென்சிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்ஸிஸ் மோஷன் சென்சார்கள் (Axis Motion Sensors) இருக்கின்றன. இந்த போட் ஸ்மார்ட் ரிங்குக்கு ஸ்மார்ட் வயர்லெஸ் சார்ஜிங் (Smart Wireless Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரிங் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரிங்குக்கான போட் ரிங் ஆப் (boAt Ring App) கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த போட் ரிங் பிரீமியம் மெட்டல் (Metal) அவுட் பாடி கொண்டுள்ளது. சென்சார்கள் மற்றும் உட்பகுதியில் செராமிக் (Ceramic) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போட் ரிங் 7, 9 மற்றும் 11 ஆகிய விரல் அளவுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விற்பனை நேற்றே (ஆகஸ்ட் 28) தொடங்கிவிட்டது. போட் (boAt), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசானில் (Amazon) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








