10 நிமிடம் சார்ஜ் 10 மணிநேரம் ஆயுள்- அட்டகாச போட் ராக்கர்ஸ் இயர்போன்கள்: விலை ரொம்ப மலிவு!
போட் ராக்கர்ஸ் இந்தியாவில் 330 நெக் பேண்ட் டிசைன் இயர்போன்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இயர்போன்கள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் மட்டுமே கவனித்து வந்த நேரத்தில் தற்போது இயர்போன்கள் சார்ஜையும் கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதையடுத்து நீடித்த பேட்டரி ஆயுள் கொண்ட இயர்போன்கள் தேவை மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப போட் நிறுவனம் போட் ராக்கர்ஸ் இந்தியாவில் 330 நெக் பேண்ட் டிசைன் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஆடியோ சாதன தயாரிப்பாளரான போட் ராக்கர்ஸ்
இந்திய ஆடியோ சாதன தயாரிப்பாளரான போட் ராக்கர்ஸ் 330 எனப்படும் புதிய ஜோடி நெக் பேண்ட் ஸ்டைல் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வயர்லெஸ் இயர்போன்களானது 10 நிமிடங்கள் சார்ஜ் செய்யும்போது 10 மணிநேர ப்ளேபேக் நேரத்தை வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. அதேபோல் முக்கிய அம்சங்களில் 10 மிமீ டைனமிக் டிரைவர்கள், மெட்டல் அலாய் ஹவுசிங் மற்றும் ப்ளூடூத் 5.0 ஆதரவு ஆகியவை அடங்கும். அதேபோல் புதிய போட் ராக்கர்ஸ் 330 நெக் பேண்ட் வயர்லெஸ் இயர்போன்களின் முக்கிய அம்சங்களை விவரமாக பார்க்கலாம்.

போட் ராக்கர்ஸ் 330 வயர்லெஸ் இயர்போன்கள்
நெக் பேண்ட் ஸ்டைல் போட் ராக்கர்ஸ் 330 வயர்லெஸ் இயர்போன்கள் விலை குறித்து பார்க்கையில், போட் ராக்கர்ஸ் 330 வயர்லெஸ் இயர்போன்களானது இந்தியாவில் ரூ.1,299 என்ற விலையில் வருகின்றன. இது தற்போது அமேசான் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் கிடைக்கிறது. மேலும் இந்த ஆடியோ சாதனம் ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. கிடைக்கும் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது ஆக்டிவ் ப்ளாக், ஓஷன் ப்ளூ, நேவி ப்ளூ, டீல் கிரின், ப்ளஸிங் மஞ்சள் மற்றும் ரேஜிங் ரெட் ஆகியவை ஆகும்.

போட் ராக்கர்ஸ் 330 இயர்போன்கள் அம்சங்கள்
போட் ராக்கர்ஸ் 330 இயர்போன்கள் அம்சங்கள் குறித்து பார்க்கையில், போட் ராக்கர்ஸ் 330 நெக் பேண்ட் வயர்லெஸ் இயர்போன்கள் 10 மிமீ டைனமிக் டிரைவர்களை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பேஸ் அதன் தனித்துவ ஒலிக்கு மிகவும் பொருத்தமான அம்சங்களை கொண்டிருக்கும் என நிறுவனம் கூறுகிறது. இயர்போன்கள் வீட்டில் வைக்கப்படும்போதும், பயன்பாடு இல்லாத நிலையில் இருக்கும் போதும் இந்த இரண்டு இயர்போன்களிலும் பின்புறத்தில் உள்ள காந்தங்களை பயன்படுத்தி ஓட்டி வைத்துக் கொள்ளலாம். இரம்டு காந்தங்களும் ஒட்டிய நிலையில் இருக்கும்போது இயர்போன்கள் பயன்பாட்டில் இருக்காது.

இரட்டை இணைத்தல் ஆதரவு
சிலிகான் நெக் பேண்டின் மற்றொரு அம்சமானது இசை ப்ளே செய்வதற்கும், உள்வரும் அழைப்புகள், இடைநிறுத்துவதற்கும் அல்லது அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிக்கவும் பட்டன்கள் கட்டுப்பாடு தொகுப்பு உள்ளது.
இரண்டு இயர்பட்ஸ்களும் இரட்டை இணைத்தல் ஆதரவைக் கொண்டுள்ளன. இரண்டையும் ஒரே நேரத்தில் இரண்டையும் கம்பி இல்லாமல் இணைக்க முடியும். இயர்போன்கள் இணைப்புக்கான ப்ளூடூத் 5.0 ஆதரவுடன் வருகின்றன. மேலும் இந்த இயர்போன்கள் வாட்டர், வியர்வை மற்றும் தூசி எதிர்ப்பு பாதுகாப்பு ஐபிஎக்ஸ் 5 மதிப்பீட்டை வழங்குகிறது. மேலும் மேலும் ஒரே சார்ஜிங்கில் 30 மணிநேரம் மியூசிக் ப்ளேபேக் அம்சத்தை வழங்குகிறது. அதுமட்டுமின்றி 10 நிமிட சார்ஜிங்கில் 10 மணிநேர ப்ளேபேக் ஆதரவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications