120 மணிநேர பிளேடைம்.. boAt பீஸ்ட் மோட்.. உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட TWS வேண்டுமா? இதான் ஒரே சாய்ஸ்..
போட் (boAt) நிறுவனம் புதிதாக உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட TWS இயர்பட்ஸ் சாதனத்தை ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. 120 மணிநேர பிளேபேக் டைம் வழங்கும் இயர்பட்ஸ் சாதனத்தில் உங்கள் பெயரை அச்சிட அனுமதிக்கும் கஸ்டமைஸ் விருப்பத்துடன் இந்த இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போட் நிறுவனம் இப்போது புதிதாக போட் நிர்வனா அயன் ஏஎன்சி (boAt Nirvana Ion ANC) என்ற TWS வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நிர்வனா அயன் இயர்பட்ஸ் சீரிஸ் வரிசையின் புதிய மாடலாகும். இந்த இயர்பட்ஸ் சாதனத்தில் எப்படி உங்கள் பெயரை அல்லது உங்களுக்கு விருப்பமானவர்களின் பெயரை அச்சிடுவது என்று பார்க்கலாம்.

போட் நிர்வனா அயன் ஏஎன்சி (boAt Nirvana Ion ANC):
இந்த இன்-இயர் வடிவமைப்பை கொண்ட போட் நிர்வனா அயன் இயர்பட்ஸ் சாதனம் கச்சிதமான பொருத்தத்துடன் சிறந்த ஆடியோ குவாலிட்டியை வழங்குகிறது. இது 10mm டிரைவர்களுடன் வருகிறது. இது போட் சிக்னேச்சர் சவுண்ட் டெக்னலாஜி ஆதரவை 2 வகையான EQ மோட் உடன் கொண்டுவந்துள்ளது. இது மிகவும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இந்த போட் நிர்வனா அயன் ஏஎன்சி (boAt Nirvana Ion ANC) இயர்பட்ஸ் சாதனம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) அம்சத்துடன் வருகிறது. இது 32dB சைலென்ஸ டிஸ்ட்ரக்ஷன் அம்சத்துடன் வருகிறது. இந்த போட் நிர்வனா அயன் (boAt Nirvana Ion) இயர்பட்ஸ் சாதனம் குவாட் மைக் ஈஎன்எக்ஸ் (ENx) டெக்னலாஜி கொண்ட உயர்தர வாய்ஸ் கால் அம்சத்தை வழங்குகிறது.
இந்த போட் நிர்வனா அயன் ஏஎன்சி (boAt Nirvana Ion ANC) இயர்பட்ஸ் சாதனம் 120 மணிநேர பிளேபேக் (120 hours playback time) நேரத்தை வழங்குகிறது. இது IPX4 ஸ்பிளாஷ் ரசிஸ்டன்ஸ் (splash resistance) உடன் வருகிறது. இது டைப்-சி சார்ஜிங் (type-C charging) போர்ட் உடன் வருகிறது. இந்த போட் நிர்வனா அயன் (boAt Nirvana Ion) சாதனத்தின் சிறப்பு என்னவென்றால், இது மல்டிபாய்ண்ட் கனெக்டிவிட்டியுடன் (Multipoint connectivity) வருகிறது.

இது உங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்லெட் (Tablet), லேப்டாப் (Laptop), கம்ப்யூட்டர் (Computer) என்ற பல சாதனங்களில் இணைக்க அனுமதிக்கிறது. உடனுக்குடன் இணைப்பை உறுதி செய்ய இதில் குவிக்க பேரிங் (Quick Paring) அம்சமும் இடம்பெற்றுள்ளது. இது பீஸ்ட் மோட் (Beast Mode) என்ற விருப்பம் கொண்ட 60ms லோ-லேடன்சி மோட் (low latency mode) அம்சத்துடன் வருகிறது. இதனால், கேமர்களுக்கு எந்தவிதமான ஆடியோ இடையூறும் ஏற்படாது.
இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் 2 இயர் பீஸ்களும் (Ear pieces) 70mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் சார்ஜிங் கேஸ் 600mAh பேட்டரியை (Battery) பேக் செய்துள்ளது. இது ஏஎஸ்ஏபி சார்ஜ் (ASAP Charge) என்ற பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இதனால், உங்கள் சாதனம் விரைவாக சார்ஜ் செய்யப்படுகிறது. இது 120 மணிநேர மொத்த பிளேபேக் நேரத்தை வழங்குகிறது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
போட் நிர்வனா அயன் ஏஎன்சி பிரைஸ் (boAt Nirvana Ion ANC Price):
இந்த புதிய போட் நிர்வனா அயன் ஏஎன்சி (boAt Nirvana Ion ANC) இயர்பட்ஸ் சாதனத்தின் விலை ரூ.2499 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் நிறுவனத்தின் boat-lifestyle.com அதிகாரப்பூர்வ தளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு மேல் கூடுதலாக ரூ.99 கட்டணம் செலுத்துவதன் மூலம் உங்கள் பெயரை சார்ஜிங் கேசில் அச்சிடலாம். இதற்கு 12 எழுத்துக்கள் வரை அனுமதிக்கிப்படுகிறது.


Click it and Unblock the Notifications








