வம்பாக பிரீமியம் Smartwatch-ஐ விற்பனை செய்யும் boAt! கம்மி விலையில் உடனே எடுத்துக்கோங்க!
இந்தியாவில் போட் (boAt) என்ற பிராண்ட் பெயரைத் தெரியாத நபரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த பிராண்ட் இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக இந்த பிராண்ட் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) மற்றும் இயர்பட்ஸ் (Earbuds) சாதனங்களை விற்பனை செய்கிறது.
இதுவரை பட்ஜெட் சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்து வந்த போட் நிறுவனம், முதல் முறையாக பிரீமியம் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. இதற்கு முன் வரை மிகவும் மலிவு விலையில் துவங்கி, பட்ஜெட் செக்மென்ட்டில் மட்டுமே boAt நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்து வந்தது. இதனால், இந்திய சந்தையில் இதன் மவுசு அதிகரித்தது என்றே சொல்லலாம்.

ஆனால், இப்போது நிறுவனம் அதன் வெற்றியை நோக்கி, பிரீமியம் ஸ்மார்ட் வாட்ச் கேட்டகிரியிலும் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. காரணம், boAt நிறுவனம் அதன் முதல் பிரீமியம் தர ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் ஸ்மார்ட் வாட்ச் பிரிவில் நிறுவனம் boAt Lunar Connect Pro மற்றும் boAt Lunar Call Pro என்ற 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
boAt Lunar Connect Pro மற்றும் boAt Lunar Call Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்புகளும் இப்போது அறிமுக சலுகையாக 70% தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகத்துடன் இனி boAt நிறுவனம், Apple, Samsung, Garmin மற்றும் Fossil போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியில் போட் கலந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இந்த 2 புது ஸ்மார்ட் வாட்ச் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

போட் லூனார் கனெக்ட் ப்ரோ மற்றும் லூனார் கால் ப்ரோ இரண்டும் கிளாசிக் ரவுண்ட் மெட்டல் டயல்களைக் கொண்டுள்ளன. இவை 1.39' இன்ச் கொண்ட ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளேவாக செயல்படுகிறது. இது ஆம்பியண்ட் லைட் சென்சார் மூலம் சுற்றுப்புற பிரகாசத்திற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்கிறது. boAt Crest ஆப்ஸ் மூலமாக இந்த வாட்ச்சின் வாட்ச் ஃபேஸ்களை நீங்களே வாட்ச் ஃபேஸ் ஸ்டுடியோவுடன் உருவாக்கிக்கொள்ளலாம்.
அனலாக் அல்லது டிஜிட்டல், கலர்ஃபுல் தீம், டச் ஃபேஸ் என்று பல விருப்பங்களை இது தருகிறது. இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் சென்சாயுடன் வேகமான Apollo3 சிப்செட்டைக் கொண்டுள்ளது. StanceBeam அம்சத்துடன் அறிமுகம் முதல் ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் இவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இது 70+ ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இன்பில்ட் HD மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. இதன் மூலம் ப்ளூடூத் கால்லிங் அழைப்பு அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் 15 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இவை ASAP பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது புளூடூத் BLE v5.0 உடன் இயக்குகிறது. Lunar Connect Pro-வின் விலை ரூ.10,999 ஆகும். அறிமுக சலுகையாக வெறும் ரூ.3,499 என்ற விலையில் கிடைக்கிறது.
இது செர்ரி ப்ளாசம், இங்க் ப்ளூ, ஆக்டிவ் பிளாக் மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய 4 நிறங்களில் கிடைக்கிறது. அதேபோல், மறுபுறம், Lunar Call Pro-வின் விலை ரூ.6,990 ஆகும். ஆனால், அறிமுக சலுகையில் ஒரு பகுதியாக இது இப்போது வெறும் ரூ.3,499 என்ற விலையில் கிடைக்கிறது. இது செர்ரி ப்ளாசம், டீப் ப்ளூ, சார்கோல் பிளாக் மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய 4 நிறங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








