Home
News

700 ஆக்டிவ் மோட்ஸ், AMOLED டிஸ்பிளே, IP67 ரேட்டிங்.. இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு வாட்ச் இனி கிடைக்காது!

அடுத்த சில ஆண்டுகள் கழித்தும் கூட அப்டேடட் ஆக இருக்கும் ஒரு தரமான ஸ்மார்ட்வாட்சை தேடுகிறீர்களா? ஆம் என்றால் போட் (boAt) நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் வாட்ச் உங்களுக்கானதாக இருக்கலாம். என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

போட் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆக லூனார் ஆர்ப் (Lunar Orb Smartwatch) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சற்றே பெரிய அமோஎல்இடி டிஸ்பிளே, சிங்கிள் சார்ஜில் 7 நாட்கள் வரை பேட்டரி லைஃப் மற்றும் ப்ளூடூத் காலிங் ஆதரவு உட்பட பல முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு வாட்ச் இனி கிடைக்காது!

சுவாரசியமாக போட் லூனார் ஆர்ப் ஸ்மார்ட்வாட்ச் ஆனது கூகுள் ஃபிட் (Googel Fit) மற்றும் ஆப்பிள் ஹெல்த் (Apple Health) ஆகிய இரண்டிற்குமே இணக்கமானதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் ரவுண்ட் டயல் (Round Dial) ஆனது 650 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 466 x 466 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always on Display) போன்ற அம்சங்களுடனான 1.45 இன்ச் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிலிகான் ஸ்ட்ராப் (Silicon Strap) உடன் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஃபிட்னஸ் மற்றும் ஆக்ட்டிவிட்டிகளை (Fitness and Activities) கண்காணிக்க உதவும் சென்சார்களுடன் வருகிறது. கூடவே இது கஸ்டமைஸ்டு தீம்கள், பேக்கிரவுண்டுகள், ஃபான்ட்ஸ் மற்றும் கலர்களை கொண்ட டூ-இட்-யுவர்செல்ஃப் வாட்ச் ஃபேஸ் ஸ்டுடியோ (Do-It-Yourself watch face studio) உடன் வருகிறது.

வேக் கெஸ்சர் (Wake Gesture) செயல்பாட்டை கொண்டுள்ள போட் லூனார் ஆர்ப் ஸ்மார்ட்வாட்ச் ஆனது எச்டி மைக்ரோஃபோன் (HD Microphone) உடனாக ஒரு ஸ்பீக்கரையும் கொண்டுள்ளது. அதாவது இந்த வாட்ச் ப்ளூடூத் காலிங்கை (Bluetooth Calling) ஆதரிக்கிறது என்று அர்த்தம்.

பேட்டரியை பொறுத்தவரை, போட் லூனார் ஆர்ப் ஸ்மார்ட் வாட்ச் ஆனது சிங்கிள் சார்ஜில் ஏழு நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை (Battery Life) வழங்கும் . மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐபி67 ரேட்டிங் (IP67 Rating) உடன் வருகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்வாட்சால் வியர்வை மற்றும் தண்ணீரை எதிர்க்க முடியும் என்று அர்த்தம்.

க்ரெஸ்ட் பிளஸ் ஓஎஸ் (Crest+ OS) மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது பயனர்களின் தூக்க முறைகள், இதயத் துடிப்பு மற்றும் எஸ்பிஐஓ2 அளவை கண்காணிக்க உதவும் சென்சார்கள் கொண்ட ஒருங்கிணைந்த க்ரெஸ்ட் ஆப் ஹெல்த் இகோசிஸ்டமையும் (Crest App Health Ecosystem) கொண்டுள்ளது.

க்ரெஸ்ட் ஆப் ஹெல்த் இகோசிஸ்டம் ஆனது பயனர்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குழுக்களுடன் இணைந்து உடற்பயிற்சி திட்டங்களை கஸ்டமைஸ் செய்யவும் உதவுகிறது. பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தங்கள் தினசரி உடற்பயிற்சிகளில் சேர அழைக்கும்போது கேமிஃபிகேஷன் மற்றும் பேட்ஜ்களையும் வழங்குகிறது

நோட்டிபிஃகேஷன்ஸ், ஸ்டெப்ஸ் கவுண்ட் (Steps Count), பயணம் செய்த தூரம் மற்றும் பகலில் பர்ன் செய்யப்படும் கலோரிஸின் எண்ணிக்கை (Burned Calories Count) போன்ற தகவல்களை வழங்கும் போட் லுனார் ஆர்ப் ஸ்மார்ட் வாட்ச் ஆனது 700க்கும் மேற்பட்ட ஆக்டிவ் மோட்களுடன் (700+ Active Modes) வருகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, பாட் லூனார் ஆர்ப் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.2,199 க்கு வாங்க கிடைக்கிறது. இது போட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (boAt Website) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக பிரவுன் லெதர், ஸ்டீல் பிளாக், செர்ரி ப்ளாசம், பேஸ்டல் கிரீன், டீப் ப்ளூ மற்றும் ஆக்டிவ் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Boat Launched New Smartwatch Under Rs 3000 Check Boat Lunar Orb Watch Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X