Home
News

பீஸ்ட் மோட்.. 40 மணி நேர பிளேடைம்.. RGB லைட்டிங்.. மலிவு விலையில் தரமான TWS இயர்பட்ஸ்.. என்ன மாடல்?

வழக்கமான போரிங் TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனங்களுக்கு மத்தியில், பியூச்சர்ஸ்டிக் டிசைனுடன் மிகவும் தனித்துவனமான தோற்றத்தில் RGB லைட்டிங்குடன் அறிமுகமாகியிருக்கும் புது இயர்பட்ஸ் சாதனம் தான் போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் (boAt Immortal 201 Earbuds) டிவைஸ்.

ஆடியோ தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் போட் (boAt) நிறுவனம், இப்போது இந்திய சந்தையில் அதன் புதிய போட் இம்மார்டல் 201 கேமிங் ப்ளூடூத் வயர்லெஸ் இயர்பட்ஸ் (boAt Immortal 201 Gaming TWS Bluetooth Wireless Earbuds) சாதனத்தை மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் மிரட்டலான அம்சங்களுடன், RGB லைட்டிங் அம்சத்தை ஆதரிக்கும் ஒரு சிறந்த இயர்பட்ஸ் ஆக இது வெளிவந்துள்ளது.

பீஸ்ட் மோட்.. 40 மணி நேர பிளேடைம்.. RGB லைட்டிங்..மலிவு விலை இயர்பட்ஸ்

அனைவரும் உற்று நோக்கும் விதத்தில் உங்களிடம் ஒரு பெஸ்ட் ஆன TWS இயர்பட்ஸ் சாதனம் வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால், கட்டாயமாக இந்த வாங்க விரும்பினால், இந்த போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் (boAt Immortal 201 Earbuds) சாதனத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். சரி, இப்போது இந்த இயர்பட்ஸ் இன் சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் (boAt Immortal 201 Earbuds):

நீண்ட கால தடையில்லாத மற்றும் இடைவிடாத இயர்பட்ஸ் அனுபவத்தை இது வழங்குகிறது. குறிப்பாக, உங்களுடைய கேமிங் மற்றும் பொழுதுபோக்கை அனுபவத்தை சிறப்பாக்க இந்த போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் (boAt Immortal 201 Earbuds) இயர்பட்ஸ் சாதனம் சிறப்பாக செயல்படுகிறது. காரணம், இது 40 மணிநேரம் வரையிலான பிளேபேக் நேரத்தை வழங்கும் திறன் கொண்டது.

வெறும் 10 நிமிட ASAP சார்ஜ் மூலம், இந்த இயர்பட்ஸ் சாதனம் 180 நிமிடங்கள் வரை பிளேபேக் நேரத்தை வழங்கக்கூடியது. இந்த போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் (boAt Immortal 201 Earbuds) சாதனத்தின் முக்கியமான சிறப்பம்சமே இதன் கேமிங் பீஸ்ட் மோட் (BEAST mode) தான். கேமிங் பீஸ்ட் மோட் உடன் இந்த இயர்பட்ஸ் சாதனம் 40ms வரை மிகக் குறைந்த லோ-லேடன்சி தாமதத்துடன் மென்மையான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

பீஸ்ட் மோட்.. 40 மணி நேர பிளேடைம்.. RGB லைட்டிங்..மலிவு விலை இயர்பட்ஸ்

இந்த போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் (boAt Immortal 201 Earbuds) சாதனத்தின் இயர்பட்ஸ் சார்ஜிங் கேஸ் ஒளிரும் RGB LED விளக்குகளுடன் வருகிறது. இது ஒருவிதமான பியுச்சரிஸ்டிக் தோற்றத்தை வழங்கி, நம்மை கவர்கிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் கிளாசிக் போட் சிக்னேச்சர் ஒலியை வழங்குகின்றன. இது 10mm டிரைவர்களுடன் வருகிறது. இதில் குவாட் மைக் (Quad Mics) பொருத்தப்பட்டுள்ளது. இது ENX தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

இது குவாட் மைக் ஆதரவுடன் வருவதால், வாய்ஸ் கால் அழைப்பு மிகவும் துல்லியமான தரத்தில் உங்களுக்கு கிடைக்கிறது. இரைச்சல் இல்லாத வாய்ஸ் கால் அழைப்புகளை இது வழங்குகிறது.இந்த இயர்பட்ஸ் சாதனங்கள் புளூடூத் v5.3 (Bluetooth v5.3) மற்றும் INSTA WAKE N PAIR தொழில்நுட்த்துடன் சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலம் உங்கள் சாதனங்களை உடனடியாக இணைக்கலாம்.

போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் விலை (boAt Immortal 201 Earbuds Price):

இந்த புதிய இயர்பட்ஸ் சாதனங்கள் டச் கண்ட்ரோல் உடன் வருகிறது. இது ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூப் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. இது IPX4-மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த போட் இம்மார்ட்டல் 201 இயர்பட்ஸ் (boAt Immortal 201 Earbuds) இயர்பட்ஸ் கேஸ் டைப்-சி இன்டர்ஃபேஸ் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இதன் விலை ரூ.1,299 மட்டுமே. இதுவொரு குறுகிய கால சிறப்பு விற்பனை விலை என்பது கவனிக்கத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Immortal 201 Bluetooth Gaming Wireless Earbuds with 40ms BEAST Mode RGB Lights Signature Sound
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X