ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு BoAt ரூ .50 லட்சம் நன்கொடை..

|

இந்தியச் சந்தையில் ஆடியோ சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் மிக முக்கியமான நிறுவனமான boAt நிறுவனம், மருத்துவமனைகளுக்கு உயர்தர ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்துள்ளது. இது கோவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் திறனை அதிகரிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவப் பொருட்களை வாங்க BoAt ரூ. 50 லட்சம் நன்கொடை

டெல்லி முழுவதும் ஆக்ஸிஜன் செறிவூட்டல்களை வழங்குவதற்காக சேவ்லைஃப் (SaveLIFE) அறக்கட்டளையுடன் boAt நிறுவனம் கூட்டுச் சேர்ந்துள்ளது. மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட்-பராமரிப்பு மையங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்ய நிறுவனம் தற்பொழுது முன்வந்துள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த இரண்டு கூட்டு நிறுவனங்கள் சுகாதாரத் துறையுடன் சேர்ந்து நெருக்கமாக பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடந்து வரும் தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விளம்பர தொல்லைகளைக் குறைக்க போட் நிறுவனம் ஒரு நாள் முழுவதும் செய்யும் அனைத்து சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் விளம்பரங்களை போட் இடைநிறுத்தம் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக அதன் சமூகத்தை இடைநிறுத்தவும், பிரதிபலிக்கவும், ஒருவரை ஒருவர் நாம் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

BoAt இன் இணை நிறுவனர் அமன் குப்தா கருத்து தெரிவிக்கையில், "COVID-19 தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவு விகிதத்தை எட்டியுள்ளது, மேலும் தேசிய தலைநகர பகுதியில் இதன் பாதிப்பு எதிர்பார்த்ததை விட அதிபயங்கரமாக உள்ளது. ஒரு இந்திய பிராண்டாக, இன்று நம் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் மதிக்கிறோம், மேலும் எங்கள் சிறிய பங்களிப்பு சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்று நம்புகிறோம். இந்த வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் நேரத்திற்கு எதிராகப் போட்டியிடும் அனைவருக்கும் இது ஆதரவளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறியுள்ளார்.

ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவப் பொருட்களை வாங்க BoAt ரூ. 50 லட்சம் நன்கொடை

சமீபத்தில் இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்து வருவது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவிற்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். அதிலும் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
boAt has partnered with SaveLIFE Foundation to donates Rs 50 Lac to procure oxygen concentrators : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X