Home
News

அடிதூள்.. 1 வாட்ச் 2 லுக்.. நொடியில் கெட்டப் சேஞ் செய்யும் boAt ஸ்மார்ட்வாட்ச்.. என்ன மாடல்? என்ன விலை?

போட் (boAt) நிறுவனம், அதன் ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் ஒரு புதுமையா வாட்சை இப்போது அறிமுகம் செய்துள்ளது. போட் எனிக்மா ஸ்விட்ச் (boAt Enigma Switch Smartwatch) என்ற ஸ்ட்ராப் மாற்றம் செய்யக்கூடிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

போட் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் வரிசை என்று எனிக்மா சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து, அந்த வரிசையை விரிவுபடுத்தும் விதமாக, நிறுவனம் இப்போது போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட் வாட்ச் (boAt Enigma Switch Smartwatch) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது எனிக்மா சீரிஸின் மெட்டல் பாடியை தழுவி வெளிவந்துள்ளது.

அடிதூள்.. 1 வாட்ச் 2 லுக்.. நொடியில் கெட்டப் சேஞ் செய்யும் boAt வாட்ச்

ஆனால், இதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை போட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த புதிய போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் (boAt Enigma Switch Smartwatch) மாடல் சாதனம் மெட்டல் பாடியுடன் வருகிறது. ஆனால், இவை ஸ்வாய் செய்ய அனுமதிக்கும் ஒரு பிரத்தியேகமான டயல் ஹெட் (Smartwatch Dial head) உடன் வருகிறது. அதாவது, இந்த போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் வட்ட டயலை நீங்கள் மற்றம் செய்துகொள்ளலாம்.

போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் (boAt Enigma Switch Smartwatch):

இந்த மாடலுக்கு ஏற்ற வாட்ச் ஸ்ட்ராப்களில் (Watch Strap) இதன் டயலை நீங்கள் பொருத்தி, உங்களுக்கு பிடித்தமான லுக்கில் இந்த போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.39" இன்ச் கொண்ட HD டிஸ்பிளேவுடன் (Display) வருகிறது.

இந்த புதிய போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் பிரத்தியேகமான கிரௌன் பட்டன் (Crown button) உடன் வருகிறது. இந்த சாதனம் உங்களுக்கு மெட்டல் பாடியுடன் பிரீமியம் (Premium) லுக்கை வழங்குகிறது. அதேபோல், சிலிகான் ஸ்ட்ராப் (Silicon Strap) மூலம் மாற்றம் செய்யும்போது இது ஸ்போர்ட்டி லுக்கை வழங்குகிறது. இது ப்ளூடூத் கால்லிங் (Bluetooth calling) அம்சத்துடன் இன்பில்ட் டயல்பேடை (Dialpad) கொண்டுள்ளது.

அடிதூள்.. 1 வாட்ச் 2 லுக்.. நொடியில் கெட்டப் சேஞ் செய்யும் boAt வாட்ச்

இந்த போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 100 ஸ்போர்ட்ஸ் மோட்டை ஆதரிக்கிறது. இது IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ்பாதுகாப்புடன் வருகிறது. இது ஹார்ட் ரேட் மானிட்டர் (heart rate sensor), SpO2 இரத்த ஆக்சிஜன் மேப்பிங் (SpO2 blood oxygen mapping), ஸ்லீப் மானிட்டர் (Sleep monitor), பிரீதிங் கைடு (Guided breathing) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (voice assistant), பைண்ட் மை போன் (Find My Phone), மியூசிக் (Music) மற்றும் கேமரா (Camera) கண்ட்ரோல் (music and camera controls) போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் விலை (boAt Enigma Switch Smartwatch Price):
போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் (boAt Enigma Switch Smartwatch) விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இதன் விலை ரூ.14,999 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, போட் நிறுவனம் தற்போது இந்த போட் எனிக்மா ஸ்விட்ச் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ. 3,799 என்ற விலைக்கு வழங்குகிறது என்று Coming Soon விளம்பரம் காண்பிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Enigma Switch Smartwatch With Swappable Dial 1.39" HD Display BT Calling & Premium Design At Rs 3799
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X