Home
News

boAt பிராண்ட் பொருள் எதாவது உங்களிடம் இருக்கிறதா? டார்க் வெப் ஆபத்தில் உங்கள் விபரங்கள்.. என்னாச்சு தெரியுமா?

போட் (boAt) இயர்பட்ஸ் (Earbuds), ஹெட்போன்ஸ் (Headphones) ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), ஆடியோ தயாரிப்பு (Audio Products) மற்றும் லைப்ஸ்டைல் (Lifestyle) என்று எந்த பொருளை நீங்கள் வங்கியிருந்தாலும், இப்போது உங்கள் தனிப்பட்ட விபரங்கள் டார்க் வெப்பில் (Darkweb) வெளியாகியிருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஃபோர்ப்ஸ் இந்தியா (Forbes India) வெளியிட்டுள்ள தகவலின் படி, போட் நிறுவனம் ஒரு மிகப்பெரிய சைபர் தாக்குதலை (Cyber attack) சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7.5 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட விபரங்கள் இந்த சைபர் தாக்குதல் மூலம் திருப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான தகவல் திருட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்னென்ன தகவல்கள் திருப்படுள்ளது.

boAt பிராண்ட் பொருள் எதாவது உங்களிடம் இருக்கிறதா? ஆபத்தில் பயனர்கள்..

போட் பிராண்ட் மீது சைபர் தாக்குதல் (Cyber attack on boAt brand):

போட் தயாரிப்புகளை வாங்கிய பயனர்களின் பெயர்கள் (Names), முகவரிகள் (Address), தொடர்பு எண்கள் (Contact Number), மின்னஞ்சல் ஐடிகள் (Mail ID) மற்றும் வாடிக்கையாளர் ஐடிகள் (Customer ID) போன்ற தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் திருப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த தகவல்களும் சுமார் 2ஜிபி அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது இப்போது டார்க் வெப் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

போட் (boAt) இயர்பட்ஸ் (Earbuds), ஹெட்போன்ஸ் (Headphones) ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), ஆடியோ தயாரிப்பு (Audio Products) மற்றும் லைப்ஸ்டைல் (Lifestyle) தயாரிப்பாளரான boAt Lifestyle தளத்தை குறிவைத்து ஏப்ரல் 5, 2024 ஆம் தேதி அன்று ஷாபிஃபைகை (ShopifyGUY) என்ற ஹேக்கரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தாக்குதல் மூலம் சுமார் 7,550,000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் அடங்கிய பைல்கள் மொத்தமாக திருடப்பட்டுள்ளது.

போட் தயாரிப்புகளை சமீபத்தில் வாங்கிய வாடிக்கையாளர்களின் தகவல் முதல், இதுவரை போட் தயாரிப்புகளை வாங்கிய பல ஆண்டுக்கு முந்தைய பயனர்களின் தகவல்கள் வரை இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் உடன் சில வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்கள் மற்றும் கிரேடு கார்டு விபரங்களும் கூட இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் இப்போது டார்க் வெப்பில் மற்றவர் அணுக கிடைப்பதனால், வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோகவையும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

boAt பிராண்ட் பொருள் எதாவது உங்களிடம் இருக்கிறதா? ஆபத்தில் பயனர்கள்..

இதனால் என்ன ஆபத்து ஏற்படும்?

இத்தகைய தகவல் திருட்டு மூலம் தனிப்பட்ட தரவு இழப்புக்கு அப்பால் இன்னும் பெரிய அளவிலான மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா எச்சரித்துள்ளது. இதனால் தனிநபர்கள் நிதி மோசடி, ஃபிஷிங் மற்றும் அடையாள திருட்டு ஆகியவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹேக்கர் என்ன காரணத்திற்காக இத்தகைய தாக்குதலை மேற்கொண்டார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இதற்கு முன்பும் எந்தவித சைபர் தாக்குதலை இந்த ஹேக்கர் மேற்கொண்டதாக தெரியவில்லை. இவரின் ஷாபிஃபைகை (ShopifyGUY) அக்கௌன்ட் மிகவும் புதிய அக்கௌன்ட்டாக இருப்பதாக சைபர் கிரைம் பாதுகாப்பு துறை கூறியுள்ளது. இவரின் இந்த தாக்குதல் பெரிய அளவில் நடைபெற்றது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், எதிர்காலத்தில் இன்னும் சில தாக்குதல்களை இவர் மேற்கொள்வார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த ஷாபிஃபைகை (ShopifyGUY) ஹேக்கர் தற்போது திருடிய தகவல்களை 8 கிரெடிட் என்ற விதத்தில் டார்க் வெப் தளத்தில் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 8 கிரெடிட் என்பது 2 யூரோவுக்கு சமம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 2 யூரோ என்பது 180 ரூபாய் ஆகும். இந்த தாக்குதலால் போட் நிறுவனம் தனது வாடிக்கையாளர் நம்பிக்கையை இழந்துள்ளது. இதனால், நிறுவனம் தற்போது அதன் தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt earbuds headphones smartwatch audio product users data breached and exposed in dark web
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X