Home
News

ஆல் டெக்னாலஜி.. வெறும் ரூ.1,999 போதும்.. டச் கன்ட்ரோல்.. நாய்ஸ் கேன்சலேஷன்.. இஎன்எக்ஸ் டெக்னாலஜி.. எந்த மாடல்?

வெறும் ரூ.1,999 பட்ஜெட்டில் டச் கன்ட்ரோல், இஎன்எக்ஸ் டெக்னாலஜி, நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி மோட், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பல பிரீமியம் அம்சங்களுடன் போட் ஏர்டோப்ஸ் ஃப்ளெக்ஸ் 454 (boAt Airdopes Flex 454) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் இதோ.

போட் ஏர்டோப்ஸ் ஃப்ளெக்ஸ் 454 அம்சங்கள் (boAt Airdopes Flex 454 Specifications): இந்த இயர்பட்ஸ் 10 மிமீ டிரைவர்கள் கொண்டுள்ளது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. அதிகபட்சம் 32dB வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கும்.

வெறும் ரூ.1999 போதும்.. டச் கன்ட்ரோல்.. நாய்ஸ் கேன்சல்.. எந்த மாடல்?

இந்த இயர்பட்ஸ் டச் கன்ட்ரோல் (Touch Controls) வசதி கொண்டிருக்கிறது. கிரிஸ்டல் கிளியர் காலிங் அனுபவத்துக்காக குவாட் மைக் (Quad Mic)கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மைக்கில் இஎன்எக்ஸ் டெக்னாலஜி (ENx Technology) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்-இயர் டிடெக்சன் (In-ear Detection) மற்றும் ஆம்பியன்ட் மோட் (Ambient Mode) வருகிறது.

இந்த இயர் டிடெக்சன் மூலம் நீங்கள் காதில் இயர்பட்ஸ் வைத்திருக்கும் நேரத்தில் மட்டுமே அது சவுண்டிங் கொடுக்கும். ஒருவேளை கலட்டிவிட்டால், சவுண்ட் தானாகவே நிறுத்தப்பட்டுவிடும். அதாவது, ஆட்டோ பிளே மற்றும் பாஸ் (Auto-Play And Pause) டெக்னாலஜி மூலம், இது அம்சம் செயல்படுகிறது. அதோடு அடாப்டிவ் இக்யூ மோட்ஸ் (Adaptive EQ Modes) வருகிறது.

அதுமட்டுமல்லாமல், போட் சிக்னேச்சர் சவுண்டிங் டெக்னாலஜி (boAt Signature Sounding Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ் அனுபவும் மற்ற இயர்பட்ஸ்களைவிட நன்றாகவே இருக்கும். இந்த போட் ஏர்டோப்ஸ் ஃப்ளெக்ஸ் 454 இயர்பட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, இதை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 250 நிமிடங்களுக்கு பயன்படுத்தலாம்.

அதேபோல ஃபுல் சார்ஜ் செய்தால் ஏஎன்சி (ANC ON Mode) ஆன் மோடில் 45 மணி நேரமும், ஏஎன்சி ஆஃப் மோடில் (ANC OFF Mode) 60 மணி நேரமும் பேக்கப் கொடுக்கும். இதற்காக டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கேமிங் பிரியர்களை தட்டுத்தூக்கும் விதமாக பீஸ்ட் மோட் என்னும் 60ms லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) வருகிறது.

இந்த இயர்பட்ஸ்க்கு ஒரு வருட வாரண்ட்டி வழங்கப்படுகிறது. அதோடு 1 வருடத்துக்கான சாப்ட்வேர் சப்போர்ட் கொடுக்கப்படுகிறடு. இதனை போட் இயரபில்ஸ் ஆப் (boAt Hearables App) மூலம் பயன்படுத்த முடியும். இந்த ஆப் அடாப்டிவ் இக்யூ (Adaptive EQ), சவுண்டிங் மோட் (Sounding Mode) மற்றும் சிஸ்டம் (System) ஆகியவற்றின் கன்ட்ரோல்களை செய்து கொள்ள உதவும்.

அதே போல போட் ஸ்மார்ட் டால்க் (boAt SmartTalk) என்னும் வாய்ஸ் கமெண்ட் டெக்னாலஜி வருகிறது. இதன் மூலம் இன்கமிங் கால்கள் வரும் போது, அக்சப்ட் (Accept) அல்லது ரிஜெக்ட் (Reject) என்று கமெண்ட் செய்து கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் ஃப்ளெக்ஸ் 454 இயர்பட்ஸ் கன்மென்டல் பிளாக் (Gunmetal Black) மற்றும் சின்க் வைட் (Zinc White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பிற்பகல் 12 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் விலை ரூ.1999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமே அடுத்த சில நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்களை கொண்ட இயர்பட்ஸ் வாங்க நினைப்பவர்கள் விரைவாக இதை வாங்க முடிவெடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes Flex 454 ANC Earbuds With Touch Controls 60h Playback Launched Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X