Home
News

ரூ.799-க்கு அறிமுகமாகும் புது boAt Airdopes Alpha! எங்கே வாங்கினால் இந்த ரேட்?

போட் (boAt) நிறுவனம், அதன் ஏர்டோப்ஸ் வரிசை இயர்பட்ஸ் சாதனத்தில் புதிதாக ஒரு சூப்பர் கூல் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. மலிவு விலையில் அட்டகாசமான ஆடியோ தரத்துடன் கூடிய ஒரு புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை போட் அறிமுகம் செய்துள்ளது.

boAt ஏர்டோப்ஸ் ஆல்பா (boAt Airdopes Alpha) என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏர்டோப்ஸ் தொடரின் TWS இயர்பட்ஸின் புதிய மலிவு விலை இயர்பட்ஸ் சாதனமாகும். கடந்த மாதம் வெளியிடப்பட்ட இம்மார்டல் 150 TWS வெளியீட்டிற்குப் பிறகு இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஓப்பன்-ஃபிட் இயர்பட் சாதனமாகும்.

ரூ.799-க்கு அறிமுகமாகும் புது boAt Airdopes Alpha! என்ன ஸ்பெஷல்?

இது 13 மிமீ டிரைவர்கள் மற்றும் போட் சிக்னேச்சர் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் இது டீப் பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்கள் டூயல் மைக் ENx தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன, இதனால் மேம்பட்ட அழைப்புத் தரத்தை உங்களால் மலிவு விலையில் அனுபவிக்க முடியும். மலிவு விலை என்பது இங்கு ரூ.1000-திற்கும் குறைவான தொகை என்பது கவனிக்கத்தக்கது.

போட் ஏர்டோப்ஸ் ஆல்பா சாதனம் 35 மணிநேரம் மொத்த பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. அதன் ASAP சார்ஜ் தொழில்நுட்பம் மற்றும் டைப்-C சார்ஜிங் திறனுடன் இந்த சாதனம் நீண்ட நேர பயன்பாட்டை உறுதி செய்கிறது. உதாரணமாக, இந்த இயர்பட்ஸ் சாதனத்தை வெறும் 10 நிமிட சார்ஜ் செய்தால், 120 நிமிட பிளே பேக் நேரத்தை அனுபவிக்க முடியும்.

கூடுதலாக, இது 50ms லோ-லேடன்சி மோட் உடன் கேமர்களுக்கு அட்டகாச பயன்பாட்டை வழங்குகிறது. இதில் ஆட்டோமேட்டிக் டிவைஸ் லிங்க் அம்சம் மற்றும் கூடுதல் வசதிக்காக IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சம் போன்ற அம்சங்கள் இதில் உள்ளது. இது 13 மிமீ டிரைவருடன் புளூடூத் v5.3 இணைப்பில் தடையின்றி இயங்குகிறது. இதில் போட் சிக்னேச்சர் சவுண்ட் அம்சம், டச் கண்ட்ரோல் அம்சம் உள்ளது.

இதில் வாய்ஸ் கால் ENx தொழில்நுட்பத்துடன் கூடிய டூயல் மைக் அம்சம் போன்றவை உள்ளது. இது 300mAh (கேஸ்) மற்றும் 35mAh x2 (இயர்பட்ஸ்) பேட்டரியை பேக் செய்கிறது. மொத்த பிளேபேக் நேரத்தின் 35 மணிநேரம் வரை இயங்குகிறது. டைப்-சி கனெக்டருடன் கூடிய பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், வெறும் 10 நிமிட சார்ஜில் 120 நிமிட பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.

இது 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது. BoAt Airdopes Alpha TWS ஆனது ஜெட் பிளாக், ஸ்வீடிஷ் ஒயிட் மற்றும் டார்க் சியான் வண்ணங்களில் வருகிறது. இது நாளை ஜூலை 5 ஆம் தேதி முதல் boAt இணையதளம் மற்றும் Flipkart இல் கிடைக்கும். இதன் அறிமுக விலை ரூ. 799 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes Alpha Launched in India at Rs 799 via Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X