Home
News

தெறிக்க விடும் சவுண்ட்பார்.. வெறும் ரூ.1,499 போதும்.. ஆஃபரில் அள்ளும் கஸ்டமர்கள்.. எந்த மாடல்?

வெறும் ரூ.1,500 பட்ஜெட்டில் வீட்டையே ஹோம் தியேட்டர் போல மாற்றக்கூடிய வகையில், 2000mAh பேட்டரி, போட் சிக்னேச்சர் சவுண்ட் டெக்னாலஜி, 2.0 சேனல் ஆடியோ, ஸ்டீரியோ சவுண்ட்டிங் உள்ளிட்ட அம்சங்களுடன் போட் நிறுவனத்தின் ஆவன்டே பார் 520 சவுண்ட்பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்னதான், உள்ளூரில் கிடைக்கும் 5 இன்ச், 8 இன்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-வூப்பர்களை வாங்கி பயன்படுத்தினாலும், அவை கம்பெனி சவுண்ட்பார்களுக்கு நிகரான ஆடியோ குவாலிட்டியை வழங்கியிருக்காது. அதுமட்டுமல்லாமல், இப்போதெல்லாம் ஆண்ட்ராய்டு டிவிகள் அதிகமாக பயன்படுத்துப்படுவதால், அவற்றிற்கு சவுண்ட்பார்கள் அல்லது ஹோம் தியேட்டர்களே பொருத்தமாக இருக்கிறது.

வெறும் ரூ.1,499 போதும்.. ஆஃபரில் அள்ளும் கஸ்டமர்கள்.. எந்த மாடல்?

இதனால், டிவி வாங்கும்போதே கூடுதலாக கொஞ்சம் பணம் கொடுத்து ஹோம் தியேட்டர் செட்டப்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவேளை, நீங்கள் இன்னும் ஹோம் தியேட்டர் செட்டப் செய்யாமல், நல்ல சவுண்ட்பார்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த போட் சவுண்ட்பார் நல்ல தேர்வாக இருக்கும்,

ஆவன்டே பார் 520 சவுண்ட்பார் அம்சங்கள் (Aavante Bar 520 Soundbar Specifications): இந்த சவுணட்பார் சிறந்த ஹோம் தியேட்டர் அனுபவத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சவுண்ட்பாரில் 16W அவுட்புட் கொண்ட 2 இன்ச் ஸ்பீக்கர்கள் இரண்டு கொடுக்கப்பட்டுள்ளன.

இதுவொரு டூயல் பாசிவ் ரேடியேட்டர் (Dual Passive Radiators) மாடலாகும். இந்த சவுண்ட்பாரில் கிரிஸ்டல் - கிளியர் ஆடியோ (Crystal Clear Audio) அனுபவத்துக்காக 2.0 சேனல் ஆடியோ பிரில்லியன்ஸ் (2.0 Channel Audio Brilliance) ஸ்டீரியோ சவுண்ட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு பேஸ் மற்றும் மியூசிக் ஆகியவற்றை அப்பட்டமாக பிரித்து காட்டும்.

இதில் ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), யுஎஸ்பி (USB) மற்றும் ஏயுஎக்ஸ் (AUX) ஆகிய மல்டிபிள் கனெக்டிவிட்டி வருகிறது. ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop), டிவி (TV) போன்ற எந்த டிவைஸ் உடனும் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இந்த ஆவன்டே பார் 520 சவுண்ட்பார் 2000mAh பேட்டரி கொண்டுள்ளது.

ஆகவே, ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 5 மணி நேரம் பயன்படுத்தலாம். இதற்காக டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 4 மணி நேரம் பிடிக்கும். இந்த சவுண்ட்பார் ஸ்லீக் மற்றும் மாடர்ன் டிசைனில் உருவாக்கப்படுள்ளது. 70dB நாய்ஸ் கேன்சலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு காம்பாக்ட் சவுண்ட்பார் என்பதால், வெறும் 680 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, இதை அவுட்டோரிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் வரும் 2 இன்ச் டிரைவர்கள் 10 மீட்டர் வரையில் ஆடியோ ரேஞ்ச் கொடுக்கும். டிசி 5வி/2ஏ (DC 5V/2A) இன்புட் வோல்டேஜ் கொண்டுள்ளது.

இதனால், எலக்ட்ரிசிட்டி குறைவாகவே செலவாகும். இந்த சவுண்ட்பாரில் சார்ஜிங் இன்டிகேட்டர் லைட் வருகிறது. அதோடு வால்யூம் பட்டன்கள், பிளே/பாஸ் பட்டன்கள் மற்றும் பவர்/மோட் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சவுண்ட்பார் சார்கோல் பிளாக் (Charcoal Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதை பிளிப்கார்ட் மற்றும் போட் லைஃப்ஸ்டைல்.காம் (Boatlifestyle.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த ஆவன்டே பார் 520 சவுண்ட்பாரின் விலை ரூ.3,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது, அறிமுக சலுகையாக ரூ.1,699 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதிலும், பிளிப்கார்ட்டில் ரூ.200 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.1,499க்கு இந்த ஆவன்டே பார் 520 சவுண்ட்பாரை பெற்றுக் கொள்ள முடியும். கம்மியான விலையில், வீட்டை ஹோம் தியேட்டராக மாற்ற விரும்புவர்கள், இந்த சவுண்ட்பாரை வாங்கிக் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Boat Aavante Bar 520 Soundbar With 2000mAh Battery, Bluetooth Price Under Rs 1500 Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X