Home
News

புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து 15-வயது சிறுவன் பலி?

புளூடூத் இயர்போன் சாதனங்களை இப்போது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பயணத்தின் போது கால் அழைப்புகளை மேற்கொள்ள இந்த புளூடூத் இயர்போன் சாதனம் மிகவும் அருமையாக பயன்படுகிறது என்றே கூறலாம். இந்நிலையில் புளூடூத்
இயர்போன் சாதனம் வெடித்து சிதறியதில் 15 வயது சிறுவன் பலியாகி இருக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

. அந்த உரையாடலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் இருக்கும் உதய்புரியா எனும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகேஷ். சம்பவத்தன்று இந்த 15 வயது சிறுவன் ராகேஷ் தனது நண்பர் ஒருவருடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடலின் போது அவர் புளூடூத் இயர் போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த சமயம் திடீரென அந்த புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்துச் சிதறியிருக்கிறது.

த் இயர்போன் சாதனம்

குறிப்பாக புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்ததில் அந்த சிறுவன் ராகேஷ் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். மேலும் சிறுவன் ராகேஷ் இரு காதுகளிலும் இந்த வெடிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகே இருக்கும் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவர்

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவர் LN Rundla, புளூடூத் சாதனம் வெடித்து சிதறிய சம்பவத்தில் சிறுவன் ராகேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். பினபு சிகிச்சை பலனின்றி அவர் இறந்திருக்கிறார். அதேபோல் நாட்டிலேயே இது போன்ற சம்பவத்தில் முதல் முறையாக
இப்போது தான் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

ங்களில் பயணம் செய்பவர்கள் இந்த

வாகனங்களில் பயணம் செய்பவர்கள் இந்த புளூடூத் சாதங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். பின்பு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களும் இந்த புளூடூத் இயர்போன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சிறுவன் புளூடூத் சாதனம் வெடித்துச் சிதறி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற புளூடூத் சாதனங்களை பயன்படுத்தும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.

சாதனங்களை சார்ஜ் செ

அதுபோல் மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்தபடி பேசுவது மிகவும் தவறு. பின்பு மொபைல்போன் அல்லது புளூடூத் சாதனம் சூடாக இருந்தால் சிறிது நேரம் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

டும்போது செல்போனை

குறிப்பாக சார்ஜ் போடும்போது செல்போனை உங்கள் தலையணையின் கீழ் வைக்க கூடாது,அது மிகவும் ஆபத்து. பின்பு நீங்கள் வாங்கும் போனுக்கு ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அடுத்து ஸ்மார்ட்போன் கீழே விழுவதை தவிருங்கள், இது பேட்டரியை சேதம் செய்யும், பின்பு மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் செல்போனை தண்ணீருக்கு அருகில் சார்ஜ் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் போன் சார்ஜில் இருக்கும்போது போனில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் பேசுவது பாதுகாப்பானது.

News Source:indiatoday.in

Best Mobiles in India

English summary
Bluetooth earphone blast kills 15-year-old boy in Rajasthan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X