ப்ளூஸ்மார்ட் உலகின் முதல் ஸ்மார்ட் சூட்கேஸ், இதை படிங்க பாஸ்..
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நாம கற்பனைக்கும் அதிகமாக வளர்ந்திட்டே தான் இருக்கின்றது. ஆனால் அவை அனைத்தும் நம்மை ஈர்க்கவில்லை, வித்தியாசமாக ஏதாவது நிகழ்ந்தாலோ அல்லது வினோதமாக ஏதாதவது வந்தால் தான் அனைவரும் செவி சாய்க்கின்றோம்.

அந்த வகையில் இங்க நீங்க பார்க்க போறது ஒரு ப்ளூஸ்மார்ட் சூட்கேஸ், இருங்க சூட்கேஸ் என்றதும் இதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் இது கொஞ்சம் வித்தியாசமானதுங்க எப்படினு நீங்களே பாருங்க.
ப்ளூஸ்மார்ட் சூடிகேஸை நீங்க உங்க மொபைஸ் போனுடன் இனைத்து கொள்ள முடியும். ஆன்டிராய்டு மற்றும் ஐபோன்களில் இதற்கான ஆப் கிடைக்கின்றது. அந்த ஆப் மூலம் நீங்க இந்த சூட்கேஸை டிஜிட்டல் முறையில் லாக் செய்ய முடியும், தப்பி தவறி தொலைந்தால் உங்க மொபைல் மூலம் இந்த சூட்கேஸ் எங்கிருக்கின்றது என்பதை ட்ராக் செய்ய முடியும்.
மேலும் நீங்க ஒவ்வொரு முறையும் எவ்வளவு எடையை இந்த சூட்கேஸ் மூலம் பயன்படுத்துகின்றீர்கள் என்றும் பார்க்க முடியும். உலகின் முதல் ஸ்மார்ட் சூட்கேஸ் இது என்பதால் மின்சாதன பொருட்களை தனியயாக வைத்து கொள்ளலாம், மொபைல் போன், டேப்ளெட் என 6 முறைகளுக்கும் மேல் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications