விண்வெளியில் நடந்தது என்ன? என்ன பார்த்தீங்க?- சொல்லுங்க., சொல்லுங்க: விண்வெளிக்கு சுற்றுலா போன பெசோஸ்!

|

அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் மூன்று பேரை ஏற்றிக் கொண்டு ப்ளூ ஆர்ஜினின் முதல் விமானம் விண்ணுக்கு பறந்தது. ராக்கெட்டின் காப்ஸ்யூல் உள்ளூர் நேரப்படி காலை 8.22 மணிக்கு மேற்கு டெக்சாஸில் தரையிறங்கியது. ப்ளூ ஆர்ஜினின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு தரையிறங்கியது. விண்கலன் பூமியில் இருந்து சுமார் 62 மைல் (100 கிலோமீட்டர்) உயரத்தில் கர்மன் கோட்டை கடந்து சென்றது. இதனால் குழுவினர் எடை குறையும் உணர்வை அனுபவித்தனர். பின் காப்ஸ்யூல் ஆறு பாராசூட்களுடன் பூமிக்கு திரும்பியது.

வெற்றிகரமாக மேற்கொண்ட விண்வெளி பயணம்

வெற்றிகரமாக மேற்கொண்ட விண்வெளி பயணம்

விர்ஜின் கேலடிக் ஹோல்டிங்ஸ் இன்க் விண்வெளி பயணம் வெற்றிகரமாக மேற்கொண்ட சில நாட்களில் ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது விரைவில் விண்வெறி சுற்றுலா மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை குறிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த பயணங்களை மேற்கொள்வதற்கு பல செல்வந்தர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

பெரிய ஜன்னல்கள் மற்றும் சாய்ந்த இருக்கைகள்

பெரிய ஜன்னல்கள் மற்றும் சாய்ந்த இருக்கைகள்

பெரிய ஜன்னல்கள் மற்றும் சாய்ந்த இருக்கைகளுடன் கூடிய 10 அடி உயர கேப்ஸ்யூல் பூஸ்டரில் இருந்து பிரிக்கப்பட்டு பூமிக்கு மேலே 62 மைல் அதாவது 100 கிலோமீட்டர் கர்மன் கோட்டைத் தாண்டி மேலே பயணித்தது. அங்கு பயணிகள் மறக்கமுடியாத புதுவித அனுபவங்களை அனுபவித்தனர். பின்னர் மீண்டும் ஆறு பாராசூட்களுடன் கேப்ஸ்யூல்கள் பாலைவன மைதானத்தை நோக்கி வந்தது.அமெரிக்கா டெக்ஸாஸில் இருந்து பறந்த ராக்கெட், 3600 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தது.

பயணம் மேற்கொண்ட நான்கு பேர்

பயணம் மேற்கொண்ட நான்கு பேர்

ஜெஃப் பெசோஸ் மற்று் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயதான வாலி ஃபங்க் மற்றும் 18 வயதான இளைஞரான ஆலிவர் டையமென் ஆகியோர் விண்ணுக்கு பயணித்தனர். ரிச்சர்ட் பிரான்சன் தனது நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் மூலம் விண்ணுக்கு பறந்த ஒன்பது நாட்களில் ஜெஃப் பெசோஸ் விண்ணுக்கு பயணித்தார். சற்று உட்கார்ந்து நிதானமாக ஜன்னலுக்கு வெளியே பாருங்கள், உங்கள் பார்வையை உள்வாங்கிக் கொள்ளுங்கள் என பெசோஸ் கூறினார். விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் ஜன்னலைவிட ப்ளூ ஆர்ஜின் வாகனத்தின் ஜன்னல் மிகப் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

100 கிலோமீட்டர் விண்வெளி பயணம்

இருப்பினும் ரிச்சர்ட் பிரான்சன் பயணத்தின் சில நாட்களுக்கு பிறகு பெசோஸ் பயணிப்பதால் இது போட்டி என்று கருத வேண்டாம் எனவும் பெசோஸ் குறிப்பிட்டார். விர்ஜின் கேலக்டிக் விமானத்தை போலவே புதிய ஷெப்பர்டும் பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நுழையவில்லை. இருப்பினும் விர்ஜின் கேலக்டிக் விமானம் பூமியில் இருந்து 53 கிமீ தூரத்தையே எட்டியது ஆனால் நியூ ஷெப்பர்ட் 62 மைல் (100 கிலோ மீட்டர்) உயரத்தில் பயணித்தது.

கர்மன் கோட்டிற்கு மேலே பயணம்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவிட்டனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. ஐந்து வயது முதல் விண்வெளிக்கு பயணிக்க கனவு கண்டேன். விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேறுவிதமான உருவத்தை கொடுக்கிறது. நான் இதில் பறக்க விரும்புகிறேன். காரணம் இது வாழ்நாள் முழுவதும் செய்ய விரும்பிய ஒரு விஷயம் ஆகும் என ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டார்.

விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர்

இவர்களுடன் பயணிக்கும் 82 வயதான பெண் பைலட் விண்வெளிக்கு பயணித்தார். இவர் 1961 முதல் 1963 ஆம் ஆண்டு வரை நாசாவில் விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர். இவரது பாலினம் காரணமாக விண்வெளி வீரர் ஆக மறுத்துவிட்டார். அமெரிக்க ராணுவத் தளத்திலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கும் ஏர் பாதுகாப்பு இன்ஸ்பெக்டராக இருந்தார். முதல் பெண் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார். இவர்களுடன் தற்போது 18 வயதான ஆலிவரும் பயணித்தார்.

அமெரிக்க தனியார் நிறுவனம்

அமெரிக்க தனியார் நிறுவனம்

ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

ஆர்வத்துடன் இருக்கும் செல்வந்தர்கள்

நிறுவனத்தின் அடுத்த விமானம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் பயணிக்கும் என ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஸ்மித் கூறினார். அதேபோல் எதிர்காலத்தில் பறக்கும் விமானத்தில் பறக்க ஏணையத்தோர் ஆர்வத்துடன் பணம் செலுத்த தயாராக இருப்பதாக ஸ்மித் கூறினார்.

Best Mobiles in India

English summary
Blue Origin's New Shepard Rocket Spent 11 minutes in Space: What Happened in Space?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X