20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4,000 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் கொண்ட விவோ 8எல்-யை பிஎல்யூ அறிமுகம் செய்கிறது

|

மியாமி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமெரிக்க நிறுவனமான பிஎல்யூ, செல்பீயை அடிப்படையாக கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4,000 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் கொண்ட விவ

விவோ 8எல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், 20 எம்பி முன்பக்க கேமராவைக் கொண்டு, நடுத்தர தன்மையுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் சீன தொழிற்நுட்ப ஜாம்பவானான விவோ நிறுவனத்துடன் பெயரளவில் ஒத்திருப்பதால், வாடிக்கையாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதன் சிறப்பான 4,000 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் ஆகும்.

1.3ஜிஹெச்இசட் வேகத்தில் இயங்க செய்யும் மீடியாடிக் எம்டி6753 ஆக்டோ-கோர் சிபியூ மூலம் பிஎல்யூ விவோ 8எல் இயங்குகிறது. மேலும் இந்த சிபியூ, 3ஜிபி ரேம் மற்றும் 5.3 இன்ச் ஹெச்டி திரையைக் கொண்டுள்ளது. மேலும் 720 x 1280 பகுப்பாய்வு மற்றும் 277 பிபிஐ பிக்ஸல் அடர்த்தி ஆகியவற்றை கொண்டுள்ளது.

20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4,000 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் கொண்ட விவ

32ஜிபி உள்ளக நினைவகத்தைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி, அந்த அளவை 64ஜிபி வரை விரிவுப்படுத்த முடியும். தனித்தன்மையுள்ள உலோக வடிவமைப்பைக் கொண்ட விவோ 8எல், மற்ற சீன ஸ்மார்ட்போன்களான ஜியோனி, ஹவுவாய் மற்றும் ஸியாமி ஆகியவற்றின் நெருக்கமான ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளது.

படப்பிடிப்பிற்கான நுணுக்கங்களைக் குறித்து பார்க்கும் போது, சோனி ஐஎம்எக்ஸ்258 சென்ஸர் உடன் கூடிய 13எம்பி பின்பக்க கேமராவை, விவோ 8எல் பெற்றுள்ளது. பின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்களுக்கு எல்இடி பிளாஸ்லைட் ஆதரவு அளிக்கப்படுகிறது.

"என் முதல் ஸ்மார்ட்போன்" திட்டத்தின் கீழ் ரூ.1349/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்.!

விவோ 8எல் 150.5 x 74.4 x 8.0 மி.மீ அளவையும், 161 கிராம் எடையும் கொண்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருப்பதோடு ரிவைஸ் சார்ஜிங் மற்றும் ஒடிஜி ஆதரவும் அளிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 7.0 நவுகட் மூலம் இயங்கும் பிஎல்யூ விவோ 8எல், Amazon.in இல் $149.99 என விலை

கடந்த அக்டோபர் மாதம் பிஎல்யூ நிறுவனம், பிஎல்யூ எஸ்1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன், 5.20 இன்ச் திரையுடன் 720 x 1280 பிக்சல் பகுப்பாய்வு தன்மையைப் பெற்று, இன்ச் ஒன்றிற்கு 282 பிக்சல் என்ற பிக்சல் அடர்த்தியை அளிக்க வல்லது.

1.5ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் மீடியாடெக் 6750 செயலி மற்றும் 2ஜிபி ரேம் மூலம் பிஎல்யூ எஸ்1 ஆற்றலைப் பெறுகிறது. அதன் பின்பக்கத்தில் 13எம்பி முதன்மை கேமராவும், செல்பீகளுக்கு ஏற்ப 5எம்பி முன்பக்க கேமராவும் காணப்படுகிறது.

இந்திய சந்தையில் செல்பீயை மையமாக கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் எதிர்பார்ப்பவராக இருந்தால், ஒப்போ மற்றும் விவோ அளிக்கும் ஆண்ட்ராய்டு கைபேசிகளை கருத்தில் கொள்ளலாம். அது தவிர, நீண்டநேர பேட்டரி தாக்குபிடிப்பு தேவையெனில், லினோவா மற்றும் சியோமி ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
BLU launches Vivo 8L with 20MP selfie camera and 4,000mAh battery unit. The smartphone is available on Amazon.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X