பட்ஜெட் விலையில் டூயல் செல்பி கேமராவுடன் அறிமுகமான Blu Bold N2 ஸ்மார்ட்போன்!

|

இப்படி ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை யாரும் எதிர்பார்கப்பவில்லை. ப்ளூ போல்ட் N2 (Blu Bold N2) வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் முழு எச்டி+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைந்து ஆக்டா-கோர் MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

ப்ளூ போல்ட் N2 அறிமுகம்

ப்ளூ போல்ட் N2 அறிமுகம்

கேமரா பற்றிப்பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இது டூயல் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. ப்ளூ போல்ட் N2 ஆனது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் AI பேஸ் ஐடென்டிபிகேஷன் அம்சத்துடன் வருகிறது.

Blu Bold N2 விலை

Blu Bold N2 விலை

Blu Bold N2 ஸ்மார்ட்போன் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஒற்றை வேரியண்ட் மாடல் விலை $249 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 19,800 விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமெரிக்காவில் அமேசான் வழியாக வாங்கக் கிடைக்கிறது. Bold N2 சைப்ரஸ் டீல் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்தியா உட்படப் பிற சந்தைகளில் அதன் கிடைக்கும் தன்மை மற்றும் விலை விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

ப்ளூ போல்ட் N2 சிறப்பம்சம்

ப்ளூ போல்ட் N2 சிறப்பம்சம்

Blu Bold N2 என்பது ஆண்ட்ராய்டு 11 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் 5G ஸ்மார்ட்போன் ஆகும். இந்த டிவைஸ் 6.6' இன்ச் AMOLED டிஸ்பிளே முழு HD+ கொண்ட 1,080 x 2,340 பிக்சல்கள் உடன் வருகிறது. இது 393ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. போல்ட் N2 ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் உடன் 8ஜிபி ரேம் இணைந்து இயக்கப்படுகிறது.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

கேமரா அம்சத்தைப் பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 115 டிகிரி உடன் கூடிய 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் கொண்ட குவாட் ரியர் AI கேமரா அமைப்பை ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், டிஸ்ப்ளேவில் 16 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது. ப்ளூ போல்ட் N2 ஸ்மார்ட்போன் ஆனது 12 கேமரா முறைகளையும் கொண்டுள்ளது.

Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?

புதிய Blu Bold N2 டிவைஸ் பேட்டரி

புதிய Blu Bold N2 டிவைஸ் பேட்டரி

புதிய Blu Bold N2 டிவைஸ் ஆனது திறக்க இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் AI ஃபேஸ் ஐடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இணைப்பிற்கு, இது 5G, 4G LTE, Bluetooth v5.1 மற்றும் Wi-Fi ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது சார்ஜ் செய்வதற்கு USB Type-C போர்ட்டையும் பெறுகிறது. போல்ட் N2 ஆனது 30W MAX விரைவு சார்ஜ் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக்

Best Mobiles in India

English summary
Blu Bold N2 With Dimensity 810 SoC Quad Rear Camera Setup Launched

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X