இணையத்தில் இப்படியும் நன்மையா?

By Keerthi
|

இன்று நாம் பயன்படுத்தும் இணையத்தில் அனைத்துமே இருக்கின்றன நல்லவை எவ்வளவு இருக்கின்றனவோ அதே அளவு தீயவையும் இருக்கின்றன, இது நாம் மறுக்க முடியாத உண்மையாகும்.

இங்கு ஒரு இணையதளம் ஒன்று நம் முக்கிய சேவைக்காகவே வந்திருக்கின்றது அதுதான் http://www.donotlink.com/ ஆகும் இதன் மூலம் நாம் ஒரு வெப்சைட்டை நிரந்திரமாக பிளாக் செய்து கொள்ள ஆப்ஷன்ஸ் இருக்கதான்.

ஆனால் நிச்சயம் இந்த மாதிரி ஒரு ஆப்ஷனை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டிர்கள் நண்பரே

முதலில், எந்த ஒரு இணையதளத்திற்கும் இணைப்பு தரும் போது அதை பலரும் சென்று பார்ப்பதும் இப்படி பலர் வருகை தருவதால் அந்த தளம் தேடியந்திர தேடல் முடிவுகள் பட்டியலில் முன்னிலை பெறுவதும் இயல்பானது தானே. ஒரு விதத்தில் இணைப்புகள் தருவதன் நோக்கமும் இது தான்.

அப்படியிருக்க , இணைப்பு தருவதன் பலன் அந்த தளத்திற்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே துவக்கப்பட்டுள்ள ஒரு இணையதளத்தை எப்படி புரிந்து கொள்வது என நாம் குழம்பலாம்.

நிற்க, நல்ல இணையதளங்கள் என்றால் பிரச்சனையே இல்லை. நல்ல இணையதளங்கள் என்றால் அதற்கு அவற்றுக்கு தாரளமாக இணைப்பு தரலாம். அவை பயன்பெறுவதை பார்த்து மகிழலாம்.ஆனால் மோசமான,வில்லங்கமான இணையதளங்களுக்கு இணைப்பு தர நேரிடும் போது என்ன நாம் என்ன பண்ணுவது.

ஒவ்வொரு இணைப்பும் தேடியந்திர மதிப்பை கூட்ட பயன்படும் என்பதால் மோசமான இணையதளங்களுக்கு இணைப்பு தரும் போது அவை அந்த இணைப்பால் பயன் பெற்று விடும். சரி மோசமான இணையதளங்களுக்கு இணைப்பு தராமலே இருந்து விடலாம் என்று கூட நீங்கள் கூறலாம்.

இருக்கலாம் தான், ஆனால் சில நேரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மோசடி தளங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது அல்லவா? அப்போது அந்த தளம் மோசமான வகையிலேனும் பிரபலமாகி இன்னும் கூடுதலான தேடியந்திர அங்கீகாரத்தை பெற்று விடுகிறது.விளைவு அந்த தளம் மேலும் பலரை ஏமாற்றலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1


இது சிக்கலானது தான் அல்லவா? இந்த சிக்கலுக்கான அழகான தீர்வு தான் டூ நாட் லிங்க் தளம் . அங்கீகாரம் பெற விரும்பாத தளங்களை சுட்டிக்காட்ட விரும்பும் போது அவற்றுக்கு நேரடியாக இணைப்பு தருவதற்கு பதிலாக அந்த தளத்தின் முகவரியை டூ நாட் லிங்க் தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே இந்த தளம் அதன் முகவரியை வேறு இணைப்பாக மாற்றித்த‌ரும்.

#2

#2

இந்த இணைப்பை கட்டுரையிலோ பதிவிலோ பகிர்ந்து கொண்டால் அதை கிளிக் செய்து பார்க்கலாம்.ஆனால் அந்த கிளிக் தேடியந்திர கணக்கில் வராது. அதே போல தேடியந்திர சிலந்திகள் வலை வீசி வரும் போதும் அந்த தளம் கண்ணில் படாது. காரணம் தேடியந்திரங்களை திரும்பி அனுப்பும் வகையில் அந்த இணைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தான்.

#3

#3


ஆக,மோசமான இணையதளத்தை அடையாளம் காட்டியது போலவும் இருக்கும்.

#4

#4

ஆனால் அந்த தளத்திற்கு தேவையில்லாத தேடியந்திர வெளிச்சம் கிடைத்து விடாமலும் செய்து விடலாம்.

#5

#5


மேலும், வில்லங்கமான இணையதளங்களுக்கு நீங்கள் இணைப்பு தரும் போது டூ நாட் லிங்க் மூலமே இணைப்பு தாருங்கள் நண்பரே.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X