உயிர் காப்பான் Blinkit.. அவசர உதவிக்கு இனி 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை.. ஒரு ட்ரிப்பிற்கு கட்டணம் எவ்வளவு?
ஜோமாட்டோ (Zomato) நிறுவனத்தின் துணை நிறுவனமான பிலின்க்கிட் (Blinkit) நிறுவனம் 10 நிமிட ஆம்புலன்ஸ் டெலிவரி சேவையை (10 minute ambulance delivery service) அறிமுகம் செய்துள்ளது. இனி ஓலா (OLA) ஆட்டோ, ஊபர் டாக்ஸி (Uber Taxi) போல இனி பொதுமக்கள் அவர்களின் அவசர உதவி தேவைக்கு (Emergency) மொபைல் போன் (Mobile phone) மூலம் ஆம்புலன்ஸ் (Ambulance) வாகனங்களை சில நொடியில் புக் செய்துகொள்ள முடியும். இந்த புதிய சேவையை பிலின்க்கிட் நிறுவனம் பிலின்க்கிட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் (Blinkit Ambulance Service) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஆம்புலன்ஸ் பிலின்க்கிட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் சேவைக்கு ஜோமாட்டோவின் பிலின்க்கிட் நிறுவனம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது? மற்றும் இந்த சேவை தற்போது இந்தியாவில் எங்கே அணுக கிடைக்கிறதென்ற விபரங்கள் இதோ. யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில், நம்பவே முடியாத ஒரு சேவையை ஜோமாட்டோ நிறுவனம் அதற்கு சொந்தமான குவிக் காமர்ஸ் தளமான பிலின்க்கிட் வழியாக ஆம்புலன்ஸ் புக்கிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

உயிர் காப்பான் Blinkit.. இனி அவசர உதவிக்கு இனி 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை:
நேற்று வரை, வெறும் மளிகை ஜாமான் மற்றும் பிரின்ட் அவுட் போன்ற பொருட்களை டூர் டெலிவரி செய்து வந்த நிறுவனம், தற்போது யாரும் நினைத்து பார்த்திடாத கற்பனைக்கு அப்பால் சென்று, இந்தியாவில் பிரைவேட் ஆம்புலன்ஸ் புக்கிங் சேவையை துவங்கியுள்ளது. குருகிராமில் ஐந்து ஆம்புலன்ஸ்களுடன் இந்த சேவை முதற்கட்டமாக தொடங்கப்படுள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திந்த்சா கூறியுள்ளார்.
விரைவில் இந்த பிலின்க்கிட் ஆம்புலன்ஸ் சேவை இந்தியாவின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும், Blinkit பயன்பாட்டின் மூலம் பேசிக் லைஃப் சப்போர்ட் ஆம்புலன்ஸ் (Basic Life Support- BLS) வாகனங்களை பொதுமக்கள் அவசர தேவைக்கு மொபைல் மூலம் புக்கிங் செய்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு இந்த வசதி தொடங்கப்படவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தின்சா.
அட்வான்ஸடு லைஃப் சப்போர்ட் ஆம்புலன்ஸ் (Advanced life support - ALS Ambulance):
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படுமென்று கூறியுள்ளார். இந்தியாவை பொறுத்தமட்டில், அவசர தேவைக்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இதுபோன்ற வாகனங்கள் முக்கியமான மருத்துவத் தேவைகளின் போது உடனுக்குடன் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறதென்று மக்கள் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பாக அட்வான்ஸடு லைஃப் சப்போர்ட் (Advanced life support - ALS) செயல்பாடுகளுடன் கூடிய மேம்பட்ட ஆம்புலன்ஸ்களுக்கு இந்தியாவில் அதிக விலை வழங்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதேபோல், இந்தியாவின் பல மாநிலங்களில் இதுபோன்ற வாகனங்களுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாக அரசாங்கத்தின் சொந்த தரவு காட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Blinkit ஆம்புலன்ஸ் சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
பிலின்க்கிட் ஆம்புலன்ஸ்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் (oxygen cylinder), ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிபிரிலேட்டர் (Automated External Defibrillator), ஸ்ட்ரெச்சர் (stretcher), மானிட்டர் (monitor), உறிஞ்சும் இயந்திரம் (suction machine) மற்றும் அத்தியாவசிய அவசர மருந்துகள் மற்றும் ஊசிகள் (essential emergency medicines and injections) உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு துணை மருத்துவர், ஒரு உதவியாளர் மற்றும் பயிற்சி பெற்ற டிரைவர் உள்ளனர். X இல் தனது இடுகையுடன் Dhindsa பகிர்ந்துள்ள ஒரு படத்தின்படி, Blinkit-ன் ஆம்புலன்ஸ் சேவைக்கு ரூ. 2,000 கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய, பொதுமக்கள் Blinkit மொபைல் ஆப்ஸை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








