உண்மையான லோ-பட்ஜெட் Smart TV.. வெறும் 14,000 விலை.. HDR.. Dolby ஆடியோ.. ஜனவரி 13 முதல் விற்பனை.. என்ன மாடல்?
புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? இந்த வாரம் இறுதி வரை வெயிட் பண்ணுங்க. அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் (Amazon Great Republic Day Sales) விற்பனை நடைபெறவுள்ளது.
இதில் குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் ப்ளூபங்க்ட் டிவிகள் (Blaupunkt TV) விற்பனைக்கு வருகிறது. குறைந்த விலையில் HDR சப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர், கூகுள் டிவி அம்சம், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்களுடன் வெறும் 14,000 ரூபாய் விலைக்குள் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க கிடைத்தால், யார் தான் வேண்டாமென்று சொல்வார்கள்.

நீங்கள் புது டிவி வாங்கும் ஐடியாவில் இருந்தால், இந்த ஜனவரி 13ம் தேதி முதல் துவங்கி ஜனவரி 19ம் தேதி வரை நடைபெறும் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் (Amazon Great Republic Day Sales) விற்பனையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவி மட்டுமின்றி, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், கேட்ஜெட்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதும் சலுகை கிடைக்கிறது.
அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் (Amazon Great Republic Day Sales):
சூப்பர் ப்ளஸ்ட்ரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Super Plastronics Private Limited - SPPL) இந்திய சந்தையில் அதன் ப்ளூபங்க்ட் டிவிகளை (Blaupunkt TV) அமேசான் வழியாக சலுகை விலையில் வழங்கவுள்ளது. இந்த ப்ளூபங்க்ட் டிவிகள் (Blaupunkt TV) இந்தியாவில் உள்ள சுமார் 19,000 பின்கோடு இடங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூபங்க்ட் டிவிகளின் சிறப்பம்சம் என்னவென்றால், இது பிரீமியம் ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் செக்மென்ட்டில் வழங்குவதே ஆகும். இந்திய சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதை உணர்ந்த ப்ளூபங்க்ட் பிராண்ட் இந்த ஸ்மார்ட் டிவியில் பல பிரீமியம் அம்சங்களை வழங்கி அசத்தியுள்ளது. சரி, இப்போது ப்ளூபங்க்ட் டிவிகளின் விலை பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

ப்ளூபங்க்ட் டிவி விலை (Blaupunkt TV Price):
ப்ளூபங்க்ட் QLED டிவியின் (Blaupunkt QLED TV) விலை ரூ.21,999 இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ப்ளூபங்க்ட் 4K கூகுள் டிவி (Blaupunkt 4K Google TV) மாடல் இந்திய சந்தையில், இந்த அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் (Amazon Great Republic Day Sales) விற்பனையின் போது ரூ.25,999 விலையில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ப்ளூபங்க்ட் எஃப்எச்டி டிவி மாடல் (Blaupunkt FHD TV) இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் ரூ.14,999 விலையில் அறிமுக சலுகையுடன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Blaupunkt டிவிகள் பிளிப்கார்ட் தளம் வழியாகவும் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு Blaupunkt ஒரு ஜெர்மனி நிறுவனமாகும்.
தரமான கார் ஆடியோ சிஸ்டம்களை தயாரித்து உலகின் தலைசிறந்த நிறுவனமாக மாறிய நிறுவனமாக Blaupunkt திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Blaupunkt நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி மாடல்களை 32" இன்ச், 43" இன்ச், 55" இன்ச், 64" இன்ச் டிஸ்பிளே அளவுகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை விரைவில் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








