Home
News

கையில ரூ.1000 இருந்தா போதும்! உங்க வீட்ட ஹோம் தியேட்டரா மாற்றலாம்! புது Blaupunkt சவுண்ட்பார்!

இசை பிரியர்களுக்கு பிடித்த சாதனம் என்றால் அது ஸ்பீக்கர்கள் தான். ஸ்பீக்கர் பல வடிவங்களில் வந்தாலும், மக்களுக்கு என்னவோ சவுண்ட்பார்கள் மீது தான் விருப்பம் அதிகமாகவுள்ளது. இதை அறிந்த Blaupunkt நிறுவனம் இப்போதொரு புதிய சவுண்ட்பாரை இந்தியாவிற்குள் கம்மி விலையில் கொண்டுவந்துள்ளது.

கம்மி விலையில் உங்கள் வீட்டையும், உங்கள் ஏரியாவையும் அலறவிடத் தகுந்த ஒரு அட்டகாசமான ஸ்பீக்கர் மாடலை செலக்ட் செய்ய முடியாமல் தவித்து வருகிறீர்களா? அப்போது இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்கள் தேவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாதனம் தான் Blaupunkt SBA25 மற்றும் Blaupunkt SMA15 சவுண்ட் பார் சாதனங்களாகும்.

கையில ரூ.1000 இருந்தா போதும்! உங்க வீட்ட ஹோம் தியேட்டரா மாற்றலாம்!

ஜெர்மன் ஆடியோ பிராண்ட் ஆனா Blaupunkt நிறுவனம், இந்தியாவில் பல ஆடியோ தயாரிப்புகளை அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்போது Blaupunkt நிறுவனம் அதன் வரிசையில் புதிய SBA25 கேமிங் சவுண்ட்பாரை மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது RGB லைட்களுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இது அதன் சிறப்பம்சமான அம்சங்களில் ஒன்றாக கேமிங் மற்றும் மியூசிக் அனுபவத்தை துல்லியமான ஆடியோ தரத்துடன் மேம்படுத்தியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

Blaupunkt SBA25 சவுண்ட்பார் வண்ணமயமான RGB லைட்களுடன் மக்களை கவரும் விதத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மியூசிக் அல்லது கேமிங் ஆடியோ இயங்கும் போது ஆடியோவிற்கு ஏற்றார் போல துடிக்கும் அம்சத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது டூயல் பேசிவ் ரேடியேட்டர்களைக் கொண்டுள்ளது மற்றும் 25W இன் சவுண்ட் அவுட்புட் வெளியீட்டை உருவாக்குகிறது. கம்மி விலையில் இது ஒரு சீரான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

Blaupunkt SBA25 சவுண்ட்பார் 2,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 6 மணிநேரம் பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. டர்போவோல்ட் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. ஆடியோ தயாரிப்பில் இன்பில்ட் மைக்ரோஃபோன் அம்சமும் பொருத்தப்பட்டுள்ளது. இது AUX, USB, TF கார்டு மற்றும் FM போன்ற பல இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது.

கையில ரூ.1000 இருந்தா போதும்! உங்க வீட்ட ஹோம் தியேட்டரா மாற்றலாம்!

இதில் இருக்கும் ஒரு சுவாரசியமான செயல்பாடு என்னவென்றால், Blaupunkt SBA25 சவுண்ட்பார் TWS இயர்பட்ஸ் இணைவதையும் ஆதரிக்கிறது. புதிய Blaupunkt சவுண்ட்பார் உயர்தர பொருட்களால் ஆன ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது நீடித்து நிலைத்திருக்கும் தன்மையை உறுதி செய்வதுடன், கூடுதலாக சவுண்ட்பார் டிவி, ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களுடன் இணக்கமாகும் இணைப்பு அம்சத்துடன் வருகிறது.

Blaupunkt சமீபத்தில் SBA15 மற்றும் SBA15GM சவுண்ட்பார்களை 2.5 இன்ச் டூயல் ஸ்பீக்கர்கள், 15W சவுண்ட் அவுட்புட் வெளியீடு, 2000mAh பேட்டரி மற்றும் பல அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது. SMA15 விலை ரூ.1,099 மட்டுமே. Blaupunkt SBA15GM விற்பனை விலை வெறும் ரூ.1,399 மட்டுமே. இப்போது நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Blaupunkt SBA25 சவுண்ட்பார் பல மேம்படுத்தலுடன் வெறும் ரூ.1,899 விலையில் வாங்க கிடைக்கிறது.

இது இப்போது Amazon India மற்றும் Blaupunkt இணையதளத்தில் வாங்க கிடைக்கிறது. 1,899 விலையில் தரமான ஆடியோ அனுபவத்துடன், RGB லைட்களுடன் கிடைக்கும் இந்த சவுண்ட்பார் சாதனத்தை யாரும் தவறவிடமாட்டார்கள். யார் தவறவிட்டாலும், இந்த டிவைஸை நீங்கள் தவறவிடாதீர்கள். உடனே Blaupunkt SBA25 சாதனத்தை ஆர்டர் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt SBA25 Soundbar Launched In India At Rs 1899 with RGB Lighting Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X