தூக்கிவாரும் விலை.. வெறும் ரூ.11,999 போதும்.. 100W அவுட்புட்.. சூட்கேஸ் டிசைன்.. எஸ்க் பேஸ் ஆடியோ!
மார்கெட் அதிரும் விலையில் சூட்கேஸ் டிசைனில் 100W சவுண்ட் அவுட்புட், எஸ்க் பேஸ் ஆடியோ, 4500mAh பேட்டரி, மைக் மற்றும் கரோக்கி ரெடி போன்ற பக்காவான அம்சங்களுடன் ப்ளூபங்க்ட் பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் (Blaupunkt PS150 Party Speaker) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ப்ளூபங்க்ட் பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் அம்சங்கள் (Blaupunkt PS150 Party Speaker Specifications): இதுவொரு அவுட்டோர் பார்ட்டி ஸ்பீக்கர் (Outdoor Party Speaker) மாடலாகும். எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வகையில் போர்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், சூட்கேஸ் போல எடுத்து செல்ல ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் எல்இடி டிஸ்பிளே (LED Display), கன்ட்ரோல் பட்டன்கள் (Control Buttons), வால்யூம் பூஸ்டர் (Volume Booster) ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதோடு ஆர்ஜிபி லைட்ஸ் (RGB LIGHTS) சப்போர்ட் வருகிறது. இந்த ப்ளூபங்க்ட் பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் 100W சவுண்ட் அவுட்புட் கொண்டிருக்கிறது. குவாலிட்டி ஆடியோ மற்றும் கிரிஸ்டல் கிளியர் பேஸ் அனுபவத்துக்காக எஸ்க் பேஸ் ஆடியோ (X Bass Audio) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ப்ளூபங்க்ட் பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் 4500mAh பேட்டரி கேபாசிட்டி (Battery Capacity) கொண்டுள்ளது. ப்ளூடூத் வெர்ஷன் 5.0 (Bluetooth Version 5.0) மற்றும் ப்ளூடூத் ஏ2டிபி ப்ரொஃபைல் (Bluetooth A2DP Profile) கனெக்டிவிட்டி வருகிறது. டிடபுள்யூஎஸ் (TWS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பார்ட்டி ஸ்பீக்கரோடு மைக் (Mic) மற்றும் கரோக்கி ரெடி (Karaoke Ready) வருகிறது.
அதேபோல ஏயுஎக்ஸ் (AUX) மற்றும் யுஎஸ்பி (USB) சப்போர்ட் உள்ளது. இதன் கன்ட்ரோல்களை பொறுத்தவரை, எக்ஸ் பேஸ் ஸ்விட்ச் (X Bass Switch), சோர்ஸ் செலெக்ட் (Source Select), டிராக் அண்ட் வால்யூம் டயல் (Track and Volume Dial) ஆகியவை வருகின்றன.
IPX4 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூபங்க்ட் பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் 7.5 கிலோ எடைக் கொண்டுள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த ஸ்பீக்கரின் விலை வெறும் ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று (செப்டம்பர் 25) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பார்ட்டி ஸ்பீக்கரை அமேசான் (Amazon) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இதைவிட கம்மியான விலையில் ப்ளூபங்க்ட் பிஎஸ்75 (Blaupunkt PS75) என்னும் மற்றொரு அவுட்டோர் ஸ்பீக்கரும் விற்பனைக்கு வந்துள்ளது. அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.
ப்ளூபங்க்ட் பிஎஸ்75 அவுட்டோர் பார்ட்டி ஸ்பீக்கர் அம்சங்கள் (Blaupunkt PS75 Outdoor Party Speaker): இந்த ஸ்பீக்கருக்கும் அவுட்டோர் பயன்பாட்டுக்கு ஏற்றபடி போர்டபிள் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டைனாமிக் ஆர்ஜிபி லைட்ஸ் (Dynamic RGB Lights) இடம்பெற்றுள்ளது. இரண்டு 5.25 இன்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் 1 சப்வூப்பர் (Subwoofer) வருகிறது.
இந்த ஸ்பீக்கர்களில் 75W சவுண்ட்டிங் அவுட்புட் கிடைக்கும். இந்த ப்ளூபங்க்ட் பிஎஸ்75 மாடலில் 85dB நாய்ஸ் கேன்சலேஷன் லெவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2400mAh பேட்டரி கேபாசிட்டி வருகிறது. இந்த பேட்டரியை ஒரு முறைஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 12 மணி நேரம் பிளேடைம் கொடுக்கக்கூடியது. இதிலும் ப்ளூடூத் வெர்ஷன் 5.0 மற்றும் ப்ளூடூத் ஏ2டிபி ப்ரொஃபைல் கனெக்டிவிட்டி வருகிறது.
அதேபோல ஏயுஎக்ஸ், யுஎஸ்பி மற்றும் கிட்டார் பிளக்இன் (Guitar plugin) சப்போர்ட் வருகிறது. இதிலும் கரோக்கி ரெடி மற்றும் டிடபுள்யூஎஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் 7.5 கிலோ எடைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.8,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








