Home
News

ஆரம்பித்த தீபாவளி.. கம்மி பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 2GB ரேம்.. 16GB மெமரி.. Google ஓஎஸ்.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் 2ஜிபி ரேம், 16ஜிபி மெமரி, 4K ரெசொலூஷன், குரோம்காஸ்ட், ஸ்மார்ட் ரிமோட், கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் ப்ளூபங்க்ட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி (Blaupunkt 43 inch QLED TV) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ப்ளூபங்க்ட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Blaupunkt 43 inch QLED TV Specifications): இந்த டிவி 43 இன்ச் (3840 × 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4K மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. இந்த டிவி 43QD7050 மாடலாகும்.

பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 2GB ரேம்.. 16GB மெமரி.. எந்த மாடல்?

இதுவொரு பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) மாடலாகும். இதில் 178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle) கிடைக்கும். இதில் 5000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ (Contrast Ratio), 16:09 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) மற்றும் 1.1 பில்லியன் கலர் சப்போர்ட் உள்ளது.

அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட்டும் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 60Hz எம்இஎம்சி (MEMC) மற்றும் எச்எல்ஜி (HLG) கொண்டுள்ளது. இந்த டிவியில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி9602 (Quad-Core MediaTek MT9602) சிப்செட் மற்றும் மாலி - ஜி52எம்சி1 ஜிபியு (Mali-G52MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ப்ளூபங்க்ட் மாடலில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-பில்ட் குரோம்காஸ்ட் (In-built Chromecast) மற்றும் ஏர்பிளே (AirPlay) வருகிறது. இந்த டிவிக்கு ஸ்மார்ட் ரிமோட் கன்ட்ரோல் சப்போர்ட் (Smart Remote Control) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியின் ஆடியோவை பொறுத்தவரை, 50W அவுட்புட் கிடைக்கிறது. அதோடு டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் (Dolby Digital), மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) சப்போர்ட் வருகிறது. இதுவொரு கூகுள் டிவி (Google TV) ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட மாடலாகும். ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் கிட்ஸ் மோட் (Kids mode) கொண்டிருக்கிறது.

இந்த டிவியின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) வருகிறது. இதில் 2 யுஎஸ்பி (USB) போர்ட், 3 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் மற்றும் ஒரு ஈதர்நெட் (Ethernet) போர்ட் வருகிறது. இந்த டிவி 6.5 கிலோ எடைக் கொண்டுள்ளது. இதற்கு ஒரு வரு வாரண்டி வழங்கப்படுகிறது.

இந்த ப்ளூபங்க்ட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி இன்று (அக்டோபர் 27) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிவியின் விலையை பொறுத்தவரை ரூ.28,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதோடு அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ (ICICI), கோடக் (Kotak) மற்றும் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த டிவியோடு ப்ளூபங்க்ட் 55 இன்ச் கூகுள் டிவியும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிவி ஃபிரேம்லெஸ் டிசைன் (Frameless Design) கொண்டுள்ளது. 55 இன்ச் (3840 × 2160 பிக்சல்கள்) 4K டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. சைபர்சவுண்ட் ஜென் 2 (CyberSound Gen 2) சவுண்டிங் டெக்னாலஜி கொண்டுள்ளது.

இந்த டிவி 55CSGT7023 மாடலாகும். மொத்தமாக 10.5 கிலோ எடைக் கொண்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள் அனைத்தும், முந்தைய மாடலில் கொடுக்கப்பட்டதை போலவே இருக்கிறது. இந்த ளூபங்க்ட் 55 இன்ச் கூகுள் டிவியின் விலை ரூ.34,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஐசிஐசிஐ, கோடக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt 43 inch 4K QLED With Bezel Less Design Sale on Flipkart Check Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X