Home
News

ரூ.15,999-க்கு 40 இன்ச், 43 இன்ச் ஸ்மார்ட்டிவி வாங்கலாம்: முழு எச்டி ஆதரவோடு அறிமுகம்- வீடே தியேட்டர்தான்!

Blaupunkt இந்தியாவில் 40 இன்ச், 43 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது.

40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட்டிவி

40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட்டிவி

Blaupunkt ஆண்ட்ராய்டு டிவிகள் 40 இன்ச் மற்றும் 43 இன்ச் உள்ளிட்ட இரண்டு வெவ்வேறு அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளன. 40 இன்ச் மாடல் ஆனது எச்டி ரெடி அம்சம், 43 இன்ச் மாடல் முழு எச்டி தெளிவுத்திறன் உடன் வருகிறது. ஜெர்மன் ஆடியோ விஷூவல் பிராண்ட் Blaupunkt இந்தியாவில் இரண்டு ஆண்ட்ராய்டு டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எச்டி ரெடி Blaupunkt 40 இன்ச் டிவி ஆனது ரூ.15,999 எனவும் 43 இன்ச் டிவியின் விலை ரூ.17,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் ஆடியோ விஷுவல் பிராண்ட்

ஜெர்மன் ஆடியோ விஷுவல் பிராண்ட்

ஜெர்மன் ஆடியோ விஷுவல் பிராண்ட் ஆன Blaupunkt., இந்தியாவில் இரண்டு ஆண்ட்ராய்டு டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு டிவிகள் 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் இரண்டு வெவ்வேரு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 40 இன்ச் எச்டி ரெடி ஆதரவோடு, 43 இன்ச் முழு எச்டி தெளிவுத்திறன் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவிகள் எஸ்பிபிஎல் மூலம் வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் ப்ளூபங்க்ட் பல மேட் இன் இந்தியா டிவிகளை வெளியிட்டது. அவை எஸ்பிபிஎல் உடன் இணைந்து தொடங்கப்பட்டன.

பிரத்யேக பிராண்ட் உரிமம்

பிரத்யேக பிராண்ட் உரிமம்

புதிய அறிமுகம் குறித்து பார்க்கையில், இந்தியாவில் Blaupunkt டிவிகளின் பிரத்யேக பிராண்ட் உரிமம் பெற்ற எஸ்பிபிஎல்-ன் சிஇஓ அவ்னீத் சிங் மர்வா இதுகுறித்து தெரிவித்தார். அதில் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் ஒரு அற்புதமான வரவைப் பெற்றிருக்கிறோம். இது எங்களது அன்பான வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. மேலும் உள்ளடக்கிய டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிளிப்கார்ட்டில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். பயனர்களுக்கு ப்ரீமியம் அம்சத்துடன் நிகரற்ற அனுபவம் வழங்குவதன் மூலம் இந்திய நுகர்வோர்கள் விருப்பங்களை புரிந்துக் கொண்டு இந்த பிரிவில் இரண்டு சிறந்த டிவிகள் அறிவித்துள்ளோம். இந்த மாடல்களில் உள்ள ஒவ்வொன்றும் இந்திய குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமான தயாரிப்புகள் என தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Blaupunkt 40 இன்ச், 43 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Blaupunkt 40 இன்ச், 43 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

எச்டி ரெடி அம்சத்தோடு வரும் Blaupunkt 40 இன்ச் டிவி ஆனது ரூ.15,999-க்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 43 இன்ச் டிவி ஆனது ரூ.17,999-க்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த டிவிகள் மார்ச் 12 முதல் பிளிப்கார்ட் வாங்குவதற்கு கிடைக்கும். Blaupunkt இந்த புது மாடல் டிவிகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Blaupunkt 40 இன்ச், 43 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி: சிறப்பம்சங்கள்

Blaupunkt 40 இன்ச், 43 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி: சிறப்பம்சங்கள்

Blaupunkt 40 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகள் ஆனது 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யூஎஸ்பி போர்ட்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இந்த அம்சம் உயர்நிலை டிவிகளுக்கு இணை மாற்றாக இருக்கிறது. இந்த டிவிகள் எச்டிஆர் 10 ஆதரவோடு வருகின்றன. பயனர்களின் ஒவ்வொரு காட்சியும் கூர்மையான விவரங்கள் மற்றும் தெளிவான வண்ணங்களோடு வருகிறது. 2 ஸ்பீக்கர்கள், ஒரு டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் மற்றும் சரவுண்ட் தொழில்நுட்பங்களை ஆதரிக்கின்றன.

40 வாட்ஸ் ஸ்பீக்கர் வெளியீடு

40 வாட்ஸ் ஸ்பீக்கர் வெளியீடு

40 வாட்ஸ் ஸ்பீக்கர் வெளியீடு, ஆழமான சரவுண்ட் ஒலி ஆதரவோடு இது வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் இது இயக்கப்படுகிறது. பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பல ஆப்ஸ் மற்றும் கேம்களுக்கான அணுகலை இதன் மூலம் பெறுவார்கள். அனைத்துக்கும் மேலாக பயனர்கள் அமேசான் பிரைம், யூடியூப் மற்றும் சோனி லைவ் ஆகியவைகளை ரிமோட்டின் ஒரே டச் மூலம் அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Blaupunkt 40 inch, 43 inch Android Smart TV Launched in India at Rs.15,999: Full HD Resolution Smart TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X