வெடிக்காத எல்பிஜி கேஸ் சிலிண்டர் அறிமுகம்: அசத்திய நிறுவனம்.!
ப்போது உள்ள சாதாரண எல்பிஜி சிலிண்டர் வகைகள் 4அல்லது6 வருடங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்றும் கோ கேஸ் எலைட் சிலிண்டர்கள் 20ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கடந்த சில வருடங்களாகவே எல்பிஜி கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை செய்திகள் மூலம் நாம் பார்த்து
வருகிறோம். அதேசமயம் கேஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் மற்றும் விழிப்புனர்வு சார்ந்த செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.

இதிலும் சில சமயங்களில் மொத்த குடும்பமே கேஸ் சிலிண்டர் வெடி விபத்தில் சிக்கி உயிரழந்த சோகங்கள் நம்மை நடுங்கச் செய்வது உண்மையே. ஒவ்வொரு முறை புதிய கேஸ் வாங்கி வைக்கும் போதும், கேஸ் லீக் வாடை வந்தாலுமே
சற்று பயந்து போகும் நமக்கு ஓர் நற்செய்தி வந்துவிட்டது என்று தான் கூறவேண்டும்.

கோ கேஸ் எலைட்
அதன்படி வெடிக்காத 100சதவீத பாதுகாப்பான கேஸ் சிலிண்டரை ‘Confidence Petroleum India Limited' என்ற நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக Time Technoplast Limited என்ற பாலிமர் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த பாதுகாப்பான ‘Go Gas elite' 'கோ கேஸ் எலைட் என்ற வகை சிலண்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மும்பை
பின்பு இந்தியா முழுவதும் அறிமுகமான இந்த சிலிண்டர்கள் எடைக் குறைவான, ப்ளாஸ்ட் ப்ரூஃப் அதாவது 100சதவிகிதம் வெடிக்காத பாதுகாப்பானவை என்று confidence நிறுவனம் கூறியுள்ளது. மேலும் மும்பையில் அறிமுகமான
கோ கேஸ் எலைட் சிலிண்டர்களுக்கு மக்களிடையே இப்போது நல்ல வரவேற்பு உள்ளது என்று அந்நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

வெளிப்பகுதி
இந்த 'கோ கேஸ் எலைட் சிறப்பம்சங் என்னவென்றால் கேஸ் கேஸ் லீக் சமயத்திலும் இவ்வகை சிலிண்டர்கள் வெடிக்காது
என்றும், நெருப்பு சூழ்ந்தாலும் சிலிண்டர் வெடிக்காமல் 100சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும் வீதம் வெளிப்பகுதி
வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

சாதாரண எல்பிஜி
பின்பு இப்போது உள்ள சாதாரண எல்பிஜி சிலிண்டர் வகைகள் 4அல்லது6 வருடங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்
என்றும் கோ கேஸ் எலைட் சிலிண்டர்கள் 20ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

கண்காணிக்கும்
மேலும் கோ கேஸ் சிலிண்டர்கள் ஃபைபரால் செய்யப்பட்டுள்ளதால் எடைக்குறைவாகவும், உள்ளுக்குள் எந்த அளவு கேஸ் இருக்கிறது என்பதை கண்காணிக்கும் வசதியோடும் இருப்பது பயனாளிகளுக்கு நிச்சயம் வசதியான விஷயம்.

20முதல்25 சதவிகிதம் விலை
இந்த கோ கேஸ் சிலிண்டர்கள் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் இருப்பதால் சாதராண சிலிண்டர்களை விட 20முதல்25 சதவிகிதம் விலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பாதுகாப்பான
கேஸ் சிலிண்டர்களுக்கு நிச்சியம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பு இருக்கும்


Click it and Unblock the Notifications