பட்ஜெட்ல பாறை மாதிரி Mobile.. 15000mAh பேட்டரி.. 18GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. ஓங்கி ஒடச்சாலும் உடையாது
தூக்கி எரிந்தால் கூட உடையாத போன்.. மாடியில் இருந்து தவறி விழுந்தால் கூட சின்ன கீரைகள் கூட விலாத ஒரு தரமான ரக்டு ஸ்மார்ட்போன் (rugged smartphone) சாதனத்தை பிளாக்வியூ (Blackview) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஓஸ்கல் பைலட் 1 (Oscal Pilot 1) என்ற புதிய பட்ஜெட் பிரைஸ் ரக்டு ஸ்மார்ட்போன் சாதனத்தை பிளாக்வியூ சாதனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பவர்புல் ஸ்பீக்கர் (powerful speaker) உடன் லாங் ரேஞ் பிளாஷ்லைட் (long range flashlight) அம்சத்துடன் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை பார்க்கலாம்.
ரக்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை மிகவும் சிறந்த தரத்தில் தயாரித்து வரும் மிகவும் பிரபலமான பிளாக்வியூ நிறுவனத்திடம் இருந்து, தற்போது புதிதாக ஓஸ்கல் பைலட் 1 (Oscal Pilot 1) என்ற சாதனம் வெளிவந்துள்ளது. இது மிகவும் பவர்புல் சாதனமாக பெரிய ஸ்பீக்கர், பிளாஸ்க்லைட் மற்றும் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. ஓஸ்கல் பைலட் 1 ஸ்மார்ட்போன் சாதனம் மிலிட்டரி கிரேட் தரத்தில் மிகவும் உறுதியான ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல பாறை மாதிரி Mobile.. ஓங்கி ஒடச்சாலும் உடையவே உடையாது:
இந்த புதிய ஓஸ்கல் பைலட் 1 (Oscal Pilot 1) சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட 720 x 1604 பிக்சல் (pixel) கொண்ட 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்புடன் வருகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட இதன் டிஸ்பிளே பல மடங்கு உறுதியானது.
இந்த ஓஸ்கல் பைலட் 1 (Oscal Pilot 1) ஸ்மார்ட்போன் சாதனம் 6ஜிபி ரேம் (RAM) உடன் 12GB விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் மொத்தம் 18GB ரேம் அம்சத்துடன், 256GB ஸ்டோரேஜ் (Storage) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி81 (MediaTek Helio G81) சிப்செட்டை கொண்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) மூலம் விரிவாக்க கூடிய 2TB ஆதரவுடன் வருகிறது.
ஓஸ்கல் பைலட் 1 ரக்டு ஸ்மார்ட்போன் (Oscal Pilot 1 Rugged Smartphone):
இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த ஓஸ்கல் பைலட் 1 ரக்டு ஸ்மார்ட்போன் (Oscal Pilot 1 Rugged Smartphone) 50MP + 2MP டூயல் ரியர் AI கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 15000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இதுவொரு பவர் பேங்க் போல செயல்படுகிறது. 10W உடன் மற்ற சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.
சந்தையில் தற்போது விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் 5000mAh திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்படுகிறது. ஆனால், இதில் 3 மடங்கு பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனை நீங்கள் நீருக்கு அடியிலும் கூட பயன்படுத்தலாம், இது கடுமையான சூடு மற்றும் குளிர் ஆகிய இரண்டையும் தாங்கும் திறன் கொண்டது எனபது குறிப்பிடத்தக்கது. இதன் ஸ்பீக்கர் 138dB டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) ஆக வருகிறது.
ஓஸ்கல் பைலட் 1 ரக்டு ஸ்மார்ட்போன் விலை (Oscal Pilot 1 Rugged Smartphone Price):
பிளாக்வியூ நிறுவனத்தின் வலைத்தளத்தில் புதிய ஓஸ்கல் பைலட் 1 (Oscal Pilot 1) சாதனம் வெறும் ரூ. 23,828 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ரூ. 17,019 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது இரண்டு நிறங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








